×
 

வாடகை பாக்கியை வாங்கி தாங்க சார்!! பயங்கரவாதிகளுக்கு வீடு கொடுத்த மத போதகர் கெஞ்சல்!

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாத டாக்டர்களிடம் இருந்து வீட்டு வாடகை பாக்கியை வாங்கித் தரும்படி, கைதான ஹரியானா மத போதகர் இஷ்தியாக், போலீசாரிடம் கெஞ்சிய தகவல் தெரிய வந்துள்ளது.

டெல்லி டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் மாத தொடக்கத்தில் நடந்த கொடூர கார் குண்டுவெடிப்பில் 15 அப்பாவி உயிர்கள் பலியாகின. இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மருத்துவர்களே இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள டாக்டர்கள் முஸம்மில் கனி, உமர், ஆதில் ராதர் உள்ளிட்டோர் ஹரியானாவின் பரிதாபாத் அல்-பலாஹ் பல்கலைக்கழகம் அருகே வாடகை வீட்டில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தனர்.

அந்த வீட்டை வாடகைக்கு விட்ட மத போதகர் மவுல்வி இஷ்தியாக் (மேவாத் பகுதி) கைது செய்யப்பட்டு, ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜம்மு-காஷ்மீர் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். விசாரணையின்போது அதிகாரிகளையே திகைக்க வைத்த விஷயத்தை அவர் கூறினார்: “இந்த டாக்டர்கள் உரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வீட்டைக் கேட்டார்கள். 

இதையும் படிங்க: காஷ்., மற்றும் பாக்., பயங்கரவாதிகள்!! தனித்தனி ஜெயில்ல போடுங்க!! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

மாதம் 2,500 ரூபாய்தான் வாடகை. ஆறு மாதமாக ஒரு ரூபாய் கூட தரவில்லை. என் குடும்பம் வாடகை பணத்தை நம்பித்தான் இருக்கிறது. தயவுசெய்து முஸம்மிலிடம் இருந்து பாக்கி வாடகையை வாங்கிக் கொடுங்கள்” என்று கதறி அழுதுள்ளார் மவுல்வி இஷ்தியாக். இவரை விரைவில் ஹரியானா போலீசாரிடம் ஒப்படைக்க ஜம்மு-காஷ்மீர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போலீசார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, 2019-லிருந்தே பேஸ்புக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இந்த டாக்டர்களைக் கண்டறிந்து மூளைச்சலவை செய்துள்ளனர். டெலிகிராம் செயலி மூலம் தாக்குதல் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளனர். 

முதலில் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற போர்க்களங்களுக்கு சென்று சேர விருப்பம் தெரிவித்த இந்த டாக்டர்களிடம், “இந்தியாவிலேயே தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துங்கள்” என்று பயங்கரவாதிகள் ஆணையிட்டுள்ளனர். யூ-டியூப் வீடியோக்களைப் பார்த்து இவர்களே மிகச் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்கப் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த வழக்கு, சமூக ஊடகங்கள் எப்படி இளைஞர்களை பயங்கரவாதிகளின் கையிலிருந்து தப்ப வைக்காமல், நேரடியாக அவர்களிடமே ஒப்படைக்கின்றன என்பதை கண்கூடாகக் காட்டுகிறது. படித்த இளைஞர்களையும் மருத்துவர்களையும் கூட தீவிரவாதத்திற்கு திருப்பும் இந்த ஆபத்தான போக்கு நாட்டிற்கு பெரும் எச்சரிக்கையாக 

இதையும் படிங்க: கோழைத்தனமான தாக்குதல்!! இந்தியா திரும்பியதும் ஆக்சனில் இறங்கிய மோடி!! அமைச்சரவையில் கர்ஜனை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share