×
 

டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்.... சாரட் வண்டியில் சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்த ஜனாதிபதி..!

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நாட்டின் 77வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட வருகிறது. நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு சாரட் வண்டியில் புறப்பட்டார். குதிரைகள் பூட்டப்பட்ட பாரம்பரியமான சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். மக்களை நோக்கி கைகளை அசைத்தவாறு உற்சாகத்தை வெளிப்படுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்து கொண்டனர். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வந்த திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார். உயர் அதிகாரிகள், வீரர்கள் புடைசூழ கடமை பாதையில் தேசிய கொடியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றி வைத்தார். கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

டெல்லி கடமைப்பாதையில் பட்டொளி வீசப் பறக்கும் தேசிய கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன. குடியரசு தினவிழாவில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருதை வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு வாகனங்கள் அணிவகுத்தன. ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதால் ஐரோப்பிய யூனியன் கொடிகள் கட்டப்பட்ட வாகனங்கள் அணிவகுப்பும் இடம்பெற்றது.

இதையும் படிங்க: இந்திய சர்வதேச ஜனநாயக மாநாடு: உலக நாடுகள் பங்கேற்புடன் டெல்லியில் தொடக்கம்..!!

அணிவகுப்பு தொடங்கியதும் முதலில் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் தங்கள் ஒழுங்கு, துணிவு, நவீன ஆயுதங்களை வெளிப்படுத்தின. குதிரைப்படை, ஒட்டகப்படை, யானைப்படை போன்ற பாரம்பரிய அணிவகுப்புகளுடன், ட்ரோன் தொழில்நுட்பம், புதிய ஏவுகணைகள், நவீன டாங்கிகள், ராணுவ வாகனங்கள் என இந்தியாவின் இராணுவ வலிமை பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் டி- 90 பீஷ்மா, அர்ஜுன் வகை பீரங்கிகள் அணிவகுத்தன.

இதையும் படிங்க: களைகட்டப்போகும் 77வது குடியரசு தின விழா..!! டெல்லியில் பிரம்மாண்ட கொண்டாட்டங்கள்..!! 10,000 பேருக்கு அழைப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share