×
 

இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடிக்கட்டிடம்!! இடிபாடுகளில் சிக்கித்தவித்த மக்கள் மீட்பு! தொடரும் மீட்புப்பணி!

டெல்லியில் மெட்ரோ நிலையம் அருகே கட்டப்பட்டிருந்த அடுக்குக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

டெல்லியில் பரபரப்பான சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் வெஸ்டர்ன் மார்க் சாலையில் அமைந்திருந்த 3 மாடி வணிகக் கட்டடம் சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ந்து வருகின்றன.

சனிக்கிழமை மாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர இடிபாட்டில் கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வந்த பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ரவி (26) என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால் அப்பகுதியில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் இருந்த நிலையில், தகவல் அறிந்த உடனேயே தில்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையும் படிங்க: நெல்லை, தென்காசியை உலுக்கிய அரிவாள் வெட்டு சம்பவம்.! மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலிஸ்!

மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களில் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் இரவு முழுவதும் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையிலும் தீவிரமாக நடைபெற்று வருவதால் மேலும் பலர் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டடம் முழுவதும் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தரைதளத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்ததால் அப்பகுதியில் மாணவர்களின் வருகை அதிகமாக இருந்துள்ளது. இடிபாட்டுக்கான காரணம் குறித்து தில்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடம் அனுமதியின்றி அல்லது பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகவே பழைய கட்டடங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத கட்டுமானங்களுக்கு எதிராக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டிருப்பது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share