×
 

NEW YEAR கொண்டாட்டம்... டெலிவரி ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனங்கள்...!

புத்தாண்டை ஒட்டி உணவு டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத்தொகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற GIG நிறுவனங்கள் அதன் டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வை அறிவித்துள்ளன. இந்தியாவில் உணவு டெலிவரி தளங்களான ஸ்விகி மற்றும் ஜொமாடோவில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்களுக்கு, 2025 டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு ஈவ் கொண்டாட்டங்களையொட்டி ஆர்டர்கள் அதிகரிக்கும் நேரத்தில் தற்காலிக ஊக்கத்தொகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிக் வொர்க்கர்களின் (gig workers) வேலைநிறுத்த அழைப்புக்கு மத்தியில் நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கையாகும்.

புத்தாண்டு ஈவ் என்பது உணவு டெலிவரி தளங்களுக்கு ஆண்டின் மிகவும் பிஸியான நாட்களில் ஒன்று. இந்த நேரத்தில் ஆர்டர்கள் பல மடங்கு அதிகரிப்பதால், டெலிவரி ஊழியர்களின் பணிச்சுமை அதிகமாகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக டெலிவரி ஊழியர்கள் தங்களது ஊதியம் குறைந்துள்ளது, வேலை நிபந்தனைகள் கடினமாக உள்ளது, சமூக பாதுகாப்பு வசதிகள் இல்லை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, டிசம்பர் 25 அன்று நடந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 31 அன்றும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இந்தச் சூழலில், ஸ்விகி மற்றும் ஜொமாடோ நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிகமாக ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளன. இதனால், ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நேரங்களில் வருமான இழப்பு ஏற்படாது என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.க்விக் காமர்ஸ் தளமான ஜெப்டோவும் இதேபோல் ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே என்றாலும், புத்தாண்டு ஈவ் போன்ற உச்சக்கட்ட நாட்களில் சேவை தடையின்றி நடைபெற உதவும் என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "HAPPY NEW YEAR"..!! பிறந்தாச்சு 2026..!! முதலில் புத்தாண்டை கொண்டாடும் நாடு எது தெரியுமா..??

இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான பீக் ஹவர் காலத்தில், டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களைப் பொறுத்து ஒரு ஆர்டருக்கு ரூ.150 வரை ஊக்கத்தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெலிவரி ஊழியர்கள் 6 மணி நேரத்தில் ரூ. 3,000 வரை சம்பாதிக்கலாம் எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதையும் படிங்க: 2026 புத்தாண்டில் பட்டாசு வெடிக்க தடை... மீறினால்..! காவல்துறை கடும் எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share