“அண்ணாமலை மாதிரியே கேவலமா நீங்களும் ஓரங்கட்டப்படுவீங்க”... விஜயை எச்சரித்த திண்டுக்கல் ஐ.லியோனி...!
அண்ணாமலையை போலவே புதியதாக கட்சி தொடங்கியவர் நிலையும் இருக்கும், செங்கல்லை பிடுங்கி அமர வைத்து விடுவார்கள் என நடிகர் விஜய் குறித்து விமர்சனம் செய்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி சேராமல் மோடியை பிரதமராக்கிட எடப்பாடி ஒத்துழைக்க மாட்டாராம், ஆனால் அவரை முதலமைச்சர் ஆக்கிட நம்முடன் கூட்டணி வைப்பாராம், நாம் மட்டும் வேலை செய்ய வேண்டுமா என பாஜவினர் அதிருப்தியை வெளிப்படுத்தி பகிரங்கமாக பேசி வருவதாக தெரிவித்தார்.
திமுகவை ஒழிப்பேன் என கூறியவர்கள் எல்லாம் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர் எனவும், அண்ணாமலையிடம் இருந்து பதவியை பிடுங்கி அமர வைத்துள்ளனர் எனவும், அண்ணாமலையை போலவே புதியதாக கட்சி தொடங்கியவர் நிலையும் இருக்கும், செங்கல்லை பிடுங்கி அமர வைத்து விடுவார்கள் என நடிகர் விஜய் குறித்து விமர்சனம் செய்தார். அறிவாலயத்தின் செங்கல்லை பிடுங்குவேன் என கூறிய அண்ணாமலையை போல, திமுகவை தீய சக்தி என கூறியவரின் நிலை அண்ணாமலையை விட கேவலமாக 2026 தேர்தலில் ஓரங்கட்டப்படுவார்கள் என்றார்.
வீட்டுக்குள்ளேயே கோவிலை வைத்திருக்கும் ஸ்டாலின், இந்துக்களின் வழிபாட்டிற்கு தடையில்லாமல் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார் என்றும், சூர சம்ஹாரம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்து விழாக்களையும், சிறப்பாக கொண்டாடிட முதலமைச்சர் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் காரை வழிமறித்த TVK நிர்வாகி அஜிதா மீண்டும் ICU- வில் அனுமதி... உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை...!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லியோனியிடம் அமலாக்கத்துறை தவெக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அமலாக்கத்துறை பாஜகவின் தேர்தல் யுக்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், தங்களை எதிர்க்கும் கட்சிகளை, நீதிமன்றம், அமலாக்க துறை, வருமான வரி துறை என்ற 3 ஆயுதங்களை கொண்டு பாஜக ஒடுக்கி வருகிறது
பொய் வழக்குகள் இனிவரும் காலங்களில் எடுபடாது என்றும், உதாரணத்திற்கு ஆ.ராசா மீது போடப்பட்ட 2ஜி வழக்கு முகந்திரமற்றது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், பாஜக கையில் எடுக்கும் ஆயுதங்கள் தவிடு பொடியாகும் என தெரிவித்தார்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி அளித்துள்ளதாக பாஜகவினர் கூறி வருவது குறித்த கேள்விக்கு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்ததை மட்டுமே மிகப்பெரிய நிதி கொடுத்தது போல பாஜக சித்தரிக்கிறது என்றும், கல்விக்கு நிதி கொடுக்கவில்லை என்பதை பாஜகவினரே ஒப்புக் கொண்டுள்ளனர் எனவும், நிதி விவகாரத்தில் பாஜகவினர் மிகைப்படுத்தி பொய் கூறி வருவதாகவும், நாம் அளிக்கும் ஒரு ரூபாய்க்கு, 26 பைசா மட்டுமே நமக்கு திரும்பி வருகிறது எனவும், பீகாருக்கு 7 ரூபாயும், உத்திர பிரதேசத்திற்கு 5 ரூபாய் கொடுக்கப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: இது தமிழ்நாடு... பாஜகவுக்கு வாய்ப்பே இல்ல... செங்கோட்டையன் திட்டவட்டம்..!