ரூமுக்குள் கஞ்சா.. சிக்கிய டைரக்டர்ஸ்..! சர்ப்ரைஸ் விசிட் அடித்த கேரளா போலீஸ்..!
கேரளாவின் எர்ணாகுளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கலால் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கஞ்சா தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் படி நடந்த இந்த சோதனையில் உயர்ரக கஞ்சா சிக்கிய நிலையில், கஞ்சா வைத்திருந்ததாக திரைப்பட இயக்குனர்கள் உட்பட 3 பேர் கைதாகினர்.
தள்ளுமலா, ஆலப்புழா, ஜிம்கானா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான், தமாஷா படைய இயக்குனர் அஷ்ரப் ஹம்ஸா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் காலித் ரகுமான் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்...தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகர் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கஞ்சா வழக்கில் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம்.. சிகிச்சைக்கு இரண்டு குழந்தைகளை அழைத்து வந்த பாகிஸ்தானியர் பரிதவிப்பு.!