×
 

சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு..  மாவட்ட நிர்வாகம் தகவல்!

சென்னை வாக்காளர் பட்டியலிலிருந்து 10 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் 'SIR' (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின் காரணமாக, சென்னையில் 7 லட்சம் முதல் 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரை பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபைத் தொகுதிகளில் தற்போது 40.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே கணக்கீட்டுப் படிவத்தைப் பெற்றுள்ளனர். மீதமுள்ள 2.04 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்படாமலேயே உள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர் 4ஆக இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட படிவங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. தீவிரத் திருத்தப் பணியின் போது பட்டியலில் உள்ள குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன:

இதையும் படிங்க: ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

15 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் வாரிசுகள் முறையாகத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்காததே இதற்குக் காரணம்.

சென்னைக்கு வந்து, பின் புறநகர் மாவட்டங்களுக்குச் சென்ற வாக்காளர்கள், தாங்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்காமல், இரண்டு இடங்களிலும் வாக்காளர்களாக உள்ளனர். சென்னை மாவட்டத்திலிருந்து பிற இடங்களுக்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களும் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன.

வாக்குச்சாவடி அலுவலர்கள் பூர்த்தி செய்த படிவங்களைச் சேகரித்து வருகின்றனர். இந்தப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் முதலில் டிசம்பர் 4 ஆக இருந்த நிலையில், தற்போது வரும் டிசம்பர் 11 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட படிவங்கள் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்தத் தீவிரத் திருத்தப் பணிகளின் அடிப்படையில், இறுதிக் கணக்கீட்டில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


 

இதையும் படிங்க: #BREAKING: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share