×
 

எனக்கு நீ மட்டும் போதும்.. டைவர்ஸ் பேப்பர்ஸை கிழித்தெறிந்த மனைவி..!! சினிமாவை மிஞ்சிய காதல்!

ஈகோவால் பிரிய நினைத்த தம்பதியினர், ஒன்று சேர்ந்து நீதிமன்ற அறைக்குள்ளேயே விவாகரத்து ஆவணங்களைக் கிழித்தெறிந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் அரங்கேறி உள்ளது.

ஈகோவும் கோபமும் பிரிக்க நினைத்த ஒரு தம்பதியரை, அன்பும் மனிதநேயமும் மீண்டும் ஒன்றிணைத்த நெகிழ்ச்சியான சம்பவம் டெல்லி நீதிமன்றத்தில் அரங்கேறியுள்ளது. நீதிமன்ற அறைக்குள்ளேயே விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து மனைவி கணவனை கட்டிப்பிடித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதையும் உருக்கி வருகிறது.

சௌரவ் மற்றும் சிகா சிங் தம்பதியினர் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற குடும்ப வாழ்க்கையில் பின்னர் கருத்து வேறுபாடுகள் உருவாகின. சிறிய பிரச்சினைகள் நாளடைவில் பெரிய தகராறாக மாறிய நிலையில், இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர். இதையடுத்து சிகா, கணவர் மீது வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டு முன்வைத்து வழக்குத் தொடர்ந்ததுடன், விவாகரத்தும் கோரியிருந்தார்.

இருவரின் பிரிவால் குடும்பத்தினர் கடும் மனவேதனை அடைந்திருந்தனர். இந்த நிலையில், சிகாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சௌரவ், கடந்த கால கசப்புகளை மறந்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு தேவையான வசதிகள் இல்லாததை உணர்ந்த அவர், தனது சொந்த முயற்சியில் மாமனாரை மேம்பட்ட சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல சார்! என்னை கருணைக்கொலை பண்ணிடுங்க! கலெக்டரிடம் கதறிய கணவன்!

 

No one Can say How Things Turn in Life & How Broken Relationships can Be Reunited by Acts of Kindness. Read the Dowry case of Shikha & Saurabh & how it ended

- Shikha Singh was married in 2020. She herself quarreled with her husband and Then filed a dowry case against him.

-… pic.twitter.com/9fmwlbDKsB

— Rosy (@rose_k01) June 11, 2026

அதுமட்டுமின்றி, ஒரு மருமகனாக அல்லாமல் சொந்த மகனைப் போல இரவு பகலாக உடன் இருந்து சிகிச்சை ஏற்பாடுகளை கவனித்ததுடன், அவரது உடல்நிலை சீராகும் வரை தொடர்ந்து உதவியுள்ளார். இந்த மனிதநேய செயலே தம்பதியரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.

https://x.com/i/status/2065110931932344792

நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கணவரின் அன்பையும் தியாகத்தையும் நினைத்து உணர்ச்சிவசப்பட்ட சிகா, நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையிலேயே விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நேராக சென்று சௌரவை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க சமரசம் செய்து கொண்டார்.

இந்த காட்சி நீதிமன்றத்தில் இருந்தவர்களையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தம்பதியரின் மீண்டும் இணைவு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், “அன்பு வென்றது”, “ஈகோவை விட உறவு பெரியது” என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ரோட்டு கடை பீஃப் பிரியாணி..!! தொண்டர்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட அமைச்சர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share