நெருங்கும் தேர்தல்..! திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்... முழு விவரம்..!!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தேர்தல் பணிகள் மும்முறமாக நடந்து வருகின்றன. திமுகவை பொருத்தவரை மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதிகளின் பார்வையாளர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .
சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர்கள் முழு விவரம்:
- மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி - இ.பரந்தாமன்
- திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம்- டாக்டர் எ.வ.வே.கம்பன்
- ஆர்.கே.நகர் - சுபா. சந்திரசேகர்
- சங்ககிரி - க.பிரபு
- ஆற்காடு - சி.ஆனந்தகுமார்
- தென்காசி - ஜி.எம். மதியழகன்
- திருநெல்வேலி - பேச்சிபாண்டியன்
- ஆயிரம்விளக்கு. - சூர்யா கிருஷ்ணமூர்த்தி
- தியாகராயர் நகர்- ஜோயல்
- கோபிச்செட்டிபாளையம் - வி.சி.சந்திரகுமார்
- கிருஷ்ணராயபுரம் - கே.இ.பிரகாஷ் எம்.பி.,
- கிணத்துக்கடவு - ஜி.பி.ராஜா
- கோவை தெற்கு - மதுரை பாலா
- உடுமலைப்பேட்டை - இன்பா ரகு
- வேப்பனஹள்ளி - நா.இளையராஜா
- ஓட்டப்பிடாரம் - ப. அப்துல்மாலிக்
- சைதாப்பேட்டை - சைதை சாதிக்
இதையும் படிங்க: திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!