திரிஷா கூட விஜய் இருக்கட்டும் ஆனால்... தவெக தலைமைக்கு திமுக வேட்பாளர் பகிரங்க எச்சரிக்கை...!
கலைஞர் கருணாநிதி, கேப்டன் விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரலாறு உள்ளது. ஆனால் வரலாறு இல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் திரிஷா உடன் இருக்கும் விஜய்க்கு என்ன வரலாறு உள்ளது என கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் சிறப்பான ஆட்சி செய்து வருவதாகவும் திமுகவுக்கு தனது வாக்கு இந்த முறை பதிவு செய்ய உள்ளதாக பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் திருவள்ளூர் திமுக வேட்பாளர்
விஜி ராஜேந்திரனின் தேர்தல் பிரச்சாரத்தில் கை குழந்தையுடன் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியின் மூன்றாவது முறையாக திமுக வேட்பாளராக போட்டியிடும் வி.ஜி.ராஜேந்திரன் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பாப்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வி.ஜி ராஜேந்திரனிடம்
கைக்குழந்தையுடன் வந்த பாஜக கட்சியை சேர்ந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாரத் என்ற இளைஞர் திமுக ஆட்சி பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருவதாகவும், பாஜகவை கட்சியை சேர்ந்த தன்னுடைய வாக்கு திமுகவுக்கு இத்தேர்தலில் அளிக்க உள்ளதாகவும் அவரிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விட்டுப்போன வழக்கு விவரம்... தொடரும் சர்ச்சை..! கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் விஜய்..!
அதைத் தொடர்ந்து பேசிய அத்தகைய இளைஞர் காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தார். திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு அல்லது திருவள்ளூர் மாவட்டத்திற்கு அப்பகுதி எல்லை வராததால் மீண்டும் திமுக ஆட்சி அமைந்துடன் சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி மதுபான கடையை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அந்த இளைஞரிடம் வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய விஜி ராஜேந்திரன் விஜய் கட்சியை தொடங்கி முதலமைச்சராக ஆக வேண்டும் என கனவு கண்டு வருவதாகவும், காங்கிரஸில் சேர்ந்த ராஜீவ் காந்தி, கலைஞர் கருணாநிதி, கேப்டன் விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரலாறு உள்ளது. ஆனால் வரலாறு இல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் திரிஷா உடன் இருக்கும் விஜய்க்கு என்ன வரலாறு உள்ளது என கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் போட்டி போடும் விஜய்க்கு என்ன வரலாறு உள்ளது
என கேள்வி எழுப்பினார். விஜய்க்கும் அஜித் குமாருக்கு போட்டி என்றால் தலையா தளபதியா என போட்டி போட்டுக்குங்க முதலமைச்சரிடம் போட்டி போட்டு வராதீர்கள் என்றார்.
விஜய் மனைவி குழந்தைகள் பெற்றோர்கள் யாரும் கூட வைத்துக்கொள்ளாமல்
திரிஷா கூட வைத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். திரிஷா கூட விஜய் இருக்கட்டும் ஆனால் சின்ன சிறுவர்களை சாலையில் விட்டு சாகடிக்க வேண்டாம் என அறிவுரை கூறினார். கொரோனா காலத்தில் முதலமைச்சர் பாதுகாப்பு கவச உடையை அணைந்து நோயாளிகளை சந்தித்ததாகவும், ஆனால் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளை சந்தித்தாரா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பணத்தை வாங்கி உள்ள போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க... கொஞ்சமும் கூச்சமில்லாமல் வாக்காளர்களுக்கு அருண்ராஜ் அட்வைஸ்...!