#BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தங்கள் கூட்டணி வியூகங்களை வேகமாக வகுத்து வருகின்றன. அந்த வகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைவது குறித்த பேச்சுகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தன.
இப்போது அது உறுதியாகிவிட்டது. விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, அவரது மறைவுக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தொடர்ந்து வந்தாலும், கட்சியின் வாக்கு வங்கி மற்றும் அமைப்பு ரீதியான வலிமை சற்று குறைந்த நிலையில் இருந்தது. கடந்த சில தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டோ அல்லது வேறு கூட்டணிகளில் இருந்தோ தேமுதிக செயல்பட்டாலும், 2026-ல் தனித்து நிற்பது அக்கட்சிக்கு பெரிய அபாயமாக இருக்கும் என்பதை பிரேமலதா உணர்ந்திருக்கிறார்.
அதனால் தான் திமுகவுடன் கைகோர்க்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. திமுக தரப்பில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பிரேமலதாவை தொடர்ந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தொகுதி ஒதுக்கீடு, தேர்தல் செலவுகள், கட்சியின் அடையாளத்தை பாதுகாப்பது போன்ற விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்... வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தே. மு.தி.க இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எல். கே.சுதீஷ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது போது உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: எவ்ளோ தைரியம் இருக்கணும்? கோவை மக்கள் கெடுத்தாங்களா? வெளுத்து வாங்கிய S.P. வேலுமணி..!