×
 

எந்தெந்த தொகுதிகள்? திமுகவிடம் தேமுதிக உத்தேச பட்டியல் கொடுத்ததாக தகவல்..!!

திமுகவிடம் திமுக உத்தேச பட்டியல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் தற்போது நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருப்பது தான். கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியுடன் நெருக்கமாக இருந்த தேமுதிக, இப்போது முதல்முறையாக திமுகவுடன் கை கோர்த்துள்ளது.

இந்தக் கூட்டணி உறுதியான பிறகு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், தேமுதிக தரப்பிலிருந்து திமுகவிடம் ஒரு உத்தேச பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலின் படி, தேமுதிக தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதும் 20 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் பட்டியலை திமுக தலைமைக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி போன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: “திமுக + தேமுதிக கொள்ளையடிப்பதற்கான கூட்டணி”... ஓபிஎஸையும் விளாசி தள்ளிய கே.டி.ராஜேந்திர பாலாஜி...! 

திமுக தரப்பில் தேமுதிகவுக்கு 7 சட்டமன்றத் தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் கட்சியின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. உத்தேச பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தாலும் தொகுதி பங்கீடு என்பது இறுதியில் திமுக தலைமை முடிவு செய்து கொடுக்கும். 

இதையும் படிங்க: ஒரு கோடி ரூபாய் செலவில் மருது சகோதரர்களுக்கு சிலை... திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share