அநாகரீகப் பேச்சால் அம்பலப்பட்ட பழனிச்சாமி.. முதல்ல பாலபாடம் படிங்க! திமுக விமர்சனம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் பாலபாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றது திமுக விமர்சித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினை எப்ப பார்த்தாலும் ஸ்டாலின் பேசுறான் என்று இபிஎஸ் ஒருமையில் பேசி இருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அவரது தரத்தை காட்டுவதாகவும் அடிமை இயக்கத்தை யார் நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கூட்டம் காட்டுவதற்காக குறுகிய முட்டுச் சந்துகளில் சுற்றித் திரியும் பழனிசாமி அரசியல் பாலபாடம் கற்கட்டும் என கூறியுள்ளது. கூட்டணிக்கு ஆள் வராத விரக்தியில் வாயிக்கு வந்ததை உளரும் பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை என்றும் இல்லையென்றால் நாவடக்கம் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் ஆகிவிட்டது என்பதால் கண்ணியம் தவறி, அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் மாநிலத்தின் முதலமைச்சரை ஒருமையில் பேசுகிற அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டதாக விமர்சித்த திமுக, அரசியல் எதிர் துருவங்களாயினும் ஒருபோதும் அவர்களை ஒருமையில் விளிக்கும் பழக்கம் தமிழ்நாட்டு அரசியல் வெளியில் இல்லை அப்படியானதொரு சூழலில் இப்படியொரு அநாகரீக அரசியல்வாதியாக பழனிசாமி அம்பலப்பட்டு நிற்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முதல்ல ஏமாத்துன பணத்தை கொடுங்க.. திமுகவுக்கு அண்ணாமலை சம்மட்டி அடி..!!
மேலும், எழுதிக் கொடுப்பவர்களிடம் என்னவென்று கேளுங்கள், அறிக்கையெல்லாம் பிறகு பேப்பரில் எழுதி படிக்கலாம் முதலில் அரசியல் பாலபாடம் கற்றுக்கொள்ளுங்கள் பழனிசாமி என்று விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க: தோஸ்த் முறையில சொன்னோம்! வேணாம்னா விடுங்க.. திருமாவளவன் ஓபன் டாக்..!