×
 

தூய சக்தி இல்லை.. முகமூடியை விலக்கினார் CM விஜய்..!! திமுக Ex.அமைச்சர் சிவசங்கர் விளாசல்..!!

தேர்தல் காலத்தில் தூய சக்தி, தீய சக்தி என்று பிரசாரம் செய்தவர், இன்று அந்த தூய சக்தி என்ற தன்னுடைய முகமூடிய விளக்கிக் கொண்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் சரியான பதிலளிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேட்டி அளித்த சிவசங்கர், தேர்தல் பிரசாரத்தின்போது “தூய சக்தி” என்று தன்னை அடையாளப்படுத்திய முதலமைச்சர், இப்போது அந்த முகமூடியை களைந்துவிட்டதாகவும், தனது அடையாளத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்பதாகவும் விமர்சித்தார்.

“தேர்தல் காலத்தில் தூய சக்திக்கும் தீய சக்திக்கும் இடையே போட்டியென பிரசாரம் செய்தவர், இன்று தனது ‘தூய சக்தி’ உருவத்தை முழுமையாகக் கைவிட்டுவிட்டார். மேலும், பல வாக்குறுதிகளிலிருந்தும் அவர் பின்வாங்கியுள்ளார்” என்று சிவசங்கர் தெரிவித்தார். குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) உள்ள எந்தக் கட்சியின் ஆதரவையும் பெற மாட்டோம் என்று முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எம்.எல்.ஏ.வை தனது பக்கம் இழுத்துள்ளதாக சிவசங்கர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தும், நேற்றும் இன்றும் அந்த எம்.எல்.ஏ. முதலமைச்சருக்கு ஆதரவு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய சிவசங்கர், “இது தூய சக்தி அல்ல, குதிரைப் பேர சக்தி. ஓடும் குதிரையை வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர் போல அவர் செயல்படுகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

“தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தால், இந்த ஆட்சி இப்படித்தான் இருக்கும். இதில் கொள்கைக்கோ, லட்சியத்துக்கோ இடமில்லை. பதவி மற்றும் அதிகாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆட்சி இது. இதுவரை ஓட்டு ஏ திரைப்படம் முடிவுக்கு வந்துவிட்டது. இது பாஜக ஆதரவுடன் நடைபெறும் ஆட்சிதான். ‘தூய சக்தி’ நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக சிவசங்கர் சுட்டிக்காட்டினார். “இது வாடகை குதிரையில் நடைபெறும் ஆட்சி. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று எச்சரித்தார். எதிர்க்கட்சியினரின் இந்த தொடர் விமர்சனங்கள், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. 

இதையும் படிங்க: ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share