×
 

தாய், மகளை கடத்தி ஆபாச படமெடுத்து மிரட்டல்?! நிலத்தகராறில் திமுக நிர்வாகி படுபாதகம்!! அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம், திமுகவில் பதவி வகிக்கும் இது போன்ற சமூக விரோதிகள்தான் என அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, சேலம் அன்னதானப்பட்டியில் நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் நிலத் தகராறு காரணமாக, ஒரு தாய் மற்றும் அவரது பெண் குழந்தையை கடத்திச் சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளனர். இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவர் தி.மு.க. கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் செந்தூர் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை மேலும் கூறியுள்ளதாவது: “ஆளுங்கட்சி என்ற மமதையிலும், அரசியல் செல்வாக்கு இருப்பதாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இப்படி மிரட்டும் அளவுக்கு தி.மு.க.வினர் இறங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

 

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் இருக்கும் செந்தூர் கார்த்தி என்ற நபரும் அவரது நண்பரும்.

ஆளுங்கட்சி என்ற… pic.twitter.com/ZnqjwmMBrx

— K.Annamalai (@annamalai_k) March 21, 2026

தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. இது மனிதத்தன்மையற்ற செயல். தமிழக காவல்துறை இந்த சமூக விரோதிகள் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட தாய்-மகளுக்கு முழு நீதி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்தப் பதிவு மேலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நில தகராறு சம்பந்தமாக பல்வேறு புகார்கள் அடிக்கடி எழுந்து வரும் சூழலில், இந்தப் புதிய சம்பவம் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. தமிழக அரசு இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: EPS தான் முதலமைச்சர்... வலுவான கூட்டணி..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share