×
 

டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

டெல்லி ஜந்தர் மந்திரில் மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலைக் கோரி 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வான்சுக்கைத் திமுக மக்களவைக் கொறடா ஆ. ராசா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

மத்திய கல்வித்துறையில் தொடர்ந்து நிலவி வரும் முறைகேடுகள், தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 19-வது நாளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வான்சுக்கை, திமுக மக்களவைக் கொறடா ஆ. ராசா நேரில் சந்தித்து திமுக சார்பில் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் இளைஞர்களால் நையாண்டியாகத் தொடங்கப்பட்டு, தற்பொழுது மாபெரும் டிஜிட்டல் இயக்கமாக மாறியுள்ள "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" (Cockroach Janta Party - CJP) இந்தப் போராட்டக் களத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி இளைஞர்கள் நடத்தி வரும் இப்போராட்டத்திற்குச் சோனம் வான்சுக் தனது ஆதரவை வழங்கியுள்ளார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இப்போராட்டக் களத்திற்கு நேரில் சென்ற திமுக எம்பி ஆ.ராசா, உண்ணாவிரதப் பந்தலில் சோனம் வான்சுக்கைச் சந்தித்துப் பேசி, திமுகவின் ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

சோனம் வான்சுக்கைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா கூறியதாவது:
"மத்திய கல்வித்துறையின் குளறுபடிகளுக்கு எதிரான இந்த அறப்போராட்டத்திற்குத் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் சோனம் வான்சுக்கின் உடல்நிலை மிகவும் நலிவடைந்துள்ளது. அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுமாறு நான் அவரிடம் அன்போடு கேட்டுக்கொண்டேன்.

இதையும் படிங்க: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' எக்ஸ் கணக்கு தடையை நீக்க டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

ஆனால், மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று சோனம் வான்சுக் என்னிடம் மிக உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

மேலும் பேசிய ஆ.ராசா, மத்திய கல்வித்துறையின் அலட்சியப் போக்கு குறித்தும், இப்போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் குறித்தும் வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் மிக வலுவாகக் குரல் எழுப்புவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இளைஞர்களின் உரிமைக் குரலாக உருவெடுத்துள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் சோனம் வான்சுக்கின் போராட்டத்திற்குத் தென்னிந்தியாவின் முதன்மைக் கட்சியான திமுக நேரில் சென்று ஆதரவளித்துள்ளது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share