#TNElectionResults2026: அடியோடு மாறும் அரசியல் களம்... திமுக, பாஜக, அதிமுக முக்கிய தலைகள் பின்னடைவு... தட்டித்தூக்கும் தவெக...!
தமிழக வெற்றிக் கழகம் 70 தொகுதிகளிலும், அதிமுக 49 இடங்களிலும், திமுக 38வது இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 85.1% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி அதிகாரப்பூர்வமாக, தவெக 97, அதிமுக 80, திமுக 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக அரசியலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவிற்கு முன்னிலை வகித்து வருகிறது. தவெக வேட்பாளர்களை எதிர்த்து பல முக்கிய தொகுதிகளில் போட்டியிட்ட முக்கிய தலைவர்கள், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் பெரும் பின்னடவை சந்தித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் திமுகவில் பின்னடவை சந்தித்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளது அறிவாலயத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 4,130 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.244 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் செல்வம் 3,86 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: வாக்கு எண்ணிக்கையில் தவெக அமோக முன்னிலை..!! மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு..!!
திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு, தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும், விருதாச்சலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, சாத்தூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவிநாசி தனி தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மதுரை மேற்கில் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடுருவ தி.மு.கவினர் திட்டம்? - இன்பதுரை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு