×
 

#BREAKING: திமுக தலையில் இடி… SIR பணிகளுக்கு தடையில்லை… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ள தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்ற வருகிறது. பீகாரில் நடந்ததை போல தமிழகத்தில் நடக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறுகிறது.

51 கோடி வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. எஸ் ஐ ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஏற்கனவே பிஹார் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னரும் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது என்றும் துவங்கப்பட்ட எஸ். ஐ. ஆர் பணி இங்கு பல குழப்பத்தை உருவாக்கும் என்று கூறப்பட்டது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: 8 வாரம் தான் டைம்... அதுக்குள்ள செஞ்சி முடிக்கணும்! தெரு நாய் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு...!

இந்த வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான மனுக்களுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வழக்கறிஞருக்கு வழங்கு உத்தரவிடப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தலையில்லை என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை ரேஸ் கோர்ஸ் கிளப் வழக்கு... தனி நீதிபதி உத்தரவுக்கு தடை! தமிழக அரசுக்கு கிரீன் சிக்னல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share