மாணவர்கள் கொலை... தொடரும் கொடூரங்கள்..! பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தாக்கு..!!
கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த கொலை சம்பவங்களை பட்டியலிட்டு பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை இன்று கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக திமுக எம்எல்ஏ எ.வ. வேலு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் எது விவாதம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாணவன் கொலை விவகாரம் தொடர்பாகவும் தமிழகத்தில் நடந்த கொலை விவரங்கள் குறித்த பட்டியலையும் எடுத்துரைத்து பேசினார். ஒரு மாணவனை இருபது பேர் அடித்துக் கொன்றதாக தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்தை மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்திருப்பதாக தெரிவித்தார். கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கனவே அமைச்சர் ராஜமோகன் கோஷ்டி மோதலால் கொலை என்று தெரிவித்ததாக கூறினார். இருதரப்பாக பிரிந்து அடித்துக் கொண்டால்தான் கோஷ்டி மோதல் என்றும் அமுதனை 20 பேர் அடித்திருப்பதாகவும் இது கொலை என்றும் தெரிவித்தார். அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறியதாக தெரிவித்தார். அது மட்டுமல்லாது திருவொற்றியூரில் மாணவன் தனுஷ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தையும் சுட்டிக்காட்டி பேசினார்.
இதையும் படிங்க: மானிய கோரிக்கை மீதான விவாதம்..! கூடியது சட்டப்பேரவை.. பரபரப்பான விவாதம்..!!
மேலும் சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். கொலை சம்பவங்கள் மட்டுமல்லாது பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கூறினார். கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவர்களும் போதை பழக்கத்தை தட்டி கேட்டதால் கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார். 100 நாள் சாதனை என பெருமை பேசும் தமிழக வெற்றிக்கழக அரசு 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: "ரம்மி விளையாட்டில் 13 ஜோக்கர்கள்"..! அலங்கோலமான சட்டமன்றம்..!! ஐ. லியோனி விமர்சனம்.!!