2025ம் ஆண்டில் மொத்தம் 7,698 புகார்கள்: அதில் இந்த 2 தான் அதிகம்..! தேசிய மகளிர் ஆணையம் ஷாக் தகவல்..!
2025ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 7698 புகார்கள் வந்துள்ளன என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 7698 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்துக்கு வந்துள்ளன. அதில் அதிகபட்சமாக குடும்ப வன்முறை, தாக்குதல், குற்றவியல் மிரட்டல் புகார்களாக வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக குடும்ப வன்முறை தொடர்பான 1594 புகார்கள் வந்துள்ளன. 2025 ஜனவரியில் 367 புகார்களும், பிப்ரவரியில் 390 புகார்களும், மார்ச் மாதத்தில் 513 புகார்களும், ஏப்ரலில் 322 புகார்களும் வந்துள்ளன. மே மாதத்தில் 2 புகார்கள் வந்துள்ளன என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களில் மட்டும் மிரட்டல் தொடர்பாக ஜனவரியில் 268 புகார்கள், பிப்ரவரியில் 260, மார்ச்சில் 288, ஏப்ரலில் 170 புகார்கள் வந்துள்ளன. தாக்குதல் 3வது அதிகபட்ச புகார்களாக வந்துள்ளன. ஜனவரியில் 249 புகார்கள்,பிப்ரவரியில் 239, மார்ச்சில் 278, ஏப்ரலில் 183, மே மாதத்தில் ஒரு புகார் வந்துள்ளன.
இதையும் படிங்க: சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்! தமிழ் வார விழா நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் சிறப்பிப்பு...
வரதட்சணைக் கொடுமை தொடர்பாக 916 புகார்கள் வந்துள்ளன. இது தவிர பாலியல் வன்கொடுமை, பலாத்கார முயற்சி தொடர்பாக 394 புகார்கள், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல் தொடர்பாக 310 புகார்கள் வந்துள்ளன. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 302 புகார்கள் வந்தன, பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளன. இது தவிர பணயிடத்தில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்கும் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றப்புகார்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் 3 மாதங்களில் மட்டும் 3921 புகார்கள் பதிவாகியுள்ளன. ஜனவரியில் 952 புகார்கள், பிப்ரவரியில் 841 புகார்கள், மார்ச்சில் 957 புகார்கள், ஏப்ரலில் 1087 புகார்கள், மே மாதத்தில் 84 புகார்கள் பதிவாகின.
டெல்லியில் 688 புகார்களும், மகாராஷ்டிராவில் 473 புகார்களும் பதிவாகின. மத்தியப் பிரதேசம், பீகார், ஹரியானா மாநிலங்களில் முறையே 351, 342, 306 புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான புகார்கள் அதிகளவு வருவதற்கு காரணம், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது, அவர்களுக்கான உரிமை, சுதந்திரம் பாதிக்கப்படும்போது, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2,123 புகார்கள் வந்துள்ளன, எந்த மாதத்திலும் இல்லாத வகையில் புகார்கள் வந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கப்பிரிவுக்கு கைது அதிகாரம் இருக்கா..? 2 ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்..!