3 நாள் பயணம்.. தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்..!!
3 நாள் பயணமாக தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது அரசு பயணமாக இங்கிலாந்துக்கு செல்கிறார். இந்த பயணம் செப்டம்பர் 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது. இது யுகே வரலாற்றில் ஒரு வெளிநாட்டு தலைவருக்கு இரண்டாவது முறை அரசு பயண அழைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப், செப்டம்பர் 16 இரவு லண்டனில் தரையிறங்க உள்ளனர். இந்த பயணத்தில், பிரிட்டன் அரசர் சார்லஸ் மன்னரை சந்திக்க உள்ளார். மேலும், பிரதமர் கீர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை.. பரபரப்பின் உச்சத்தில் அமெரிக்கா..!!
இந்த பயணம், அமெரிக்கா-யுகே இடையிலான சிறப்பு உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் முந்தைய பயணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் இருந்தபோதிலும், இம்முறை அமைதியான சூழலில் நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், சில போராட்டங்கள் நடைபெறலாம் என போலீசார் தயாராக உள்ளனர்.
இங்கிலாந்து அரசர் சார்லஸ் III அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பயணத்தில், டிரம்ப் உடன் அவரது மனைவி மெலானியா டிரம்பும் பங்கேற்கிறார். இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்கிறார். தொடர்ந்து அரசு மரியாதை வழங்கப்பட்ட பின், இரு தலைவர்களும் மதிய உணவு அருந்துவர்.
பின்னர், டிரம்ப் செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு சென்று, மறைந்த ராணி எலிசபெத் II இன் கல்லறையில் மரியாதை செலுத்த உள்ளார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் மற்றும் ரெட் அரோஸ் குழுவின் ஃப்ளைபாஸ்ட் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் வின்ட்சர் கோட்டையில் அரசு விருந்து நடைபெறும், அங்கு சார்லஸ் மற்றும் டிரம்ப் உரைகள் ஆற்றுவர்.
இந்த பயணம், உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெக்சிட் பின்னணியில் யுகேயின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள உதவும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். டிரம்பின் தனிப்பட்ட ஆர்வமான பிரிட்டன் அரச குடும்பத்துடனான சந்திப்பு, அவருக்கு சிறப்பான அங்கீகாரமாக இருக்கும்.
இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. லண்டன் தெருக்களில் போலீசார் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். டிரம்பின் கொள்கைகள் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கிலாந்து-அமெரிக்க உறவு உலகிலேயே மிகவும் வலிமையானது என்று ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “இனி வீட்டு வேலை கூட கிடைக்காது” - இந்தியர்கள் தலையில் அடுத்த இடியை இறங்கிய டிரம்ப்... உலக நாடுகளுக்கும் பேரதிர்ச்சி...!