×
 

பெற்றோர்களே உஷார்!! அடுத்த இருமல் மருந்து குறித்து வெளியானது அதிர்ச்சி தகவல்... இதை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க..!

இன்னும் இரண்டு இருமல் மருந்துகள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு எச்சரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருமல் மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சிடிஎஸ்சிஓ எனப்படும் மத்திய அரசின் மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்ட உத்தரவின்படி தமிழ்நாட்டின் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் சிரப் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு ரசாயனமான டையத்தலின் கிளைக்கால் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது, தற்போது ஸ்ரீசன் பார்மா நிறுவனம் மருந்து தயாரிப்பில் ஈடுபட நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இன்னும் இரண்டு இருமல் மருந்துகள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு எச்சரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ரப் இருமல் மருந்தை சாப்பிட்ட 22 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்ததோடு இன்னும் சில குழந்தைகள் சிகிச்சையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் மரணமடைய ஆரம்பித்ததை எடுத்து இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அந்த மருந்து நிறுவனத்தை சோதனையிட்டனர். சோதனையின் போது மத்திய பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட பேட்ச் நம்பர் எஸ்ஆர்3 2025 மே மாதம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கைப்பற்றப்பட்டன. ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் நிறுவனத்தின் கோல்ட்ரிஃப் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள மருந்துகள் முடக்கி வைக்கப்பட்டன. மேலும் இந்த மருந்துகளை விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது இந்த மருந்துகள் ஒடிசா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. 

இதையும் படிங்க: ஸ்ரீசன் பார்மாவால் வந்த சிக்கல்... அலர்ட் ஆன தமிழ்நாடு அரசு... அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு...!

அந்த மருந்து தொடர்பான ஆய்வு குறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை 41 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சோதனையின் போது கண்டறியப்பட்ட 364 விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டன. அதில் இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட ப்ரோபலின் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் மருந்து பொருட்களுக்கான தரத்தில் இல்லை என்பதும் அதில் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய நச்சு பொருளான டையத்தலின் கிளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் மருந்து கட்டுப்பாட்டு துறை தெரிவித்தது. குறிப்பாக மத்தியப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட மருந்து தொகுப்புகளில்  மருந்து தொகுப்பில் டையத்தலின் கிளைக்கால் 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருந்து தயாரிப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டது. 

மருந்து உற்பத்தி துறையில் ப்ரோபலின் கிளைக்கால் என்பது பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒரு வகை மருந்துகளை தயாரிக்க பயன்படுத்தப்படுவது. இரண்டாவது வகை பெயிண்ட் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுவது. இருமல் மருந்துகளில் பாராசிட்டமல், பெனிலிப்ரைன் ஹைட்ரோகுளோரைட், குளோர்பினிரமின் மெலேட் ஆகிய மருந்து பொருட்கள் இருக்கும். இதில் பாராசிட்டமாலை கரைப்பதற்கான கரைப்பானாக இந்த ப்ரோபலின் கிளைக்கால் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மருந்து நிறுவனங்கள் தங்களுக்கான மூலப்பொருட்களை ஒரே இடத்தில் இருந்துதான் கொள்முதல் செய்வார்கள். ஒவ்வொரு மூலப்பொருளும் வரும்போதும் அவற்றை பரிசோதனை செய்துதான் தயாரிப்பில் பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை மருந்து தயாரிப்பு நிறுவனம் பரிசோதிக்காமல் பயன்படுத்தி இருக்கலாம். அதனால் இப்படி ஒரு பேராபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதேபோல் டயத்தலின் கிளைக்கால் என்ற அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனத்துடன் கலப்படம் செய்யப்பட்ட மேலும் இரண்டு இருமல் மந்துகளை வாங்குவதற்கும் அவற்றை பயன்படுத்துவதற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது குஜராத்தில் தயாரிக்கப்படும் ரீ லைஃப், ரெஸ்பிஃபிரெஷ் ஆகிய சிரப்புகள் கடுமையான விஷம் என்றும், இது சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும் நச்சுத்தன்மை கொண்ட டையத்தலின் கிளைக்காலால் மாசுபட்டிருப்பதை மத்திய பிரதேச அரசு மருந்து சோதனை ஆய்வகத்தின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியது. இரண்டு இருமல் மருந்துகள் விநியோகிக்கப்படுவதை தடுக்க மாநிலத்தில் உள்ள மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மருந்துகளை குறைந்த அளவில் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும், ஏன் மரணம் கூட ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "Really you are Beautiful"..!! மெலோனியின் அழகை வர்ணித்த டிரம்ப்..! எகிப்து மாநாட்டில் சிரிப்பலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share