#BREAKING மிரட்டும் ‘டிட்வா’; விரட்டும் கனமழை - இந்த தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டத்திற்கு மட்டும் இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நேற்று 'டிட்வா ' புயலாக உருவானது. இந்தப் புயல் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் இலங்கை கடற்கரையையொட்டி, சென்னைக்குத் தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது இலங்கையின் நிலப்பரப்பு வழியாக நகராமல், கடல் மார்க்கமாகவே நகர்ந்து இன்று நள்ளிரவு நேரங்களில் காவிரி டெல்டா மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடல் பகுதியை அடையக்கூடும். குறிப்பாக, நாகப்பட்டினம் அருகே புயலின் முன்பகுதி நிலப்பரப்பில் ஊடுருவி, பின்னர் அங்கிருந்து வடக்கு நோக்கி காரைக்கால், மயிலாடுதுறை கடல் வழியாகச் சென்னை நோக்கிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சென்னைக்குத் தெற்கே கரையை கடக்கவோ அல்லது கரையோரத்திலேயே வலுவிழக்கவோ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகாலை முதல் ராமேஸ்வரம் தீவு பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் கனமழையானது கொட்டி தீர்த்தது வருகிறது. இதனால் தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் மாணவியை கொன்றது பட்டியலின இளைஞனா? உடைந்த உண்மைகள்...!
இதையும் படிங்க: வெட்டி காவு குடுங்க அவன..! என் பிள்ளை துடிச்சு துடிச்சு செத்துடுச்சே... கதறும் உறவினர்கள்..!