அந்த 3 FILES என்ன.? 1 வாரம் தான் டைம்... முதல்வருக்கு கெடு விதித்த துரைமுருகன்.!!
1 வாரத்துக்குள் கோப்புகளை வெளியிட முதல்வர் விஜயை துரைமுருகன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற விவாதங்களின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் ஆட்சியில் சில துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக ஆளும் தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, திமுக உறுப்பினர்கள் ஆதாரங்களை கேட்டு அழுத்தம் கொடுத்தனர். அப்போது முதலமைச்சர் விஜய் பதிலளிக்கையில், மூன்று துறைகள் தொடர்பான கோப்புகள் தனது மேஜையில் ஆதாரங்களுடன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவை உரிய நேரத்தில் திறக்கப்படும் என்றும், அவசரப்பட்டு திறக்க வைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார். நிதியமைச்சர் ஏற்கனவே இந்த கோப்புகள் குறித்து பேசியதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வந்தது. இடைத்தேர்தல்களில் சிலருக்கு நல்லது நடக்கட்டும் என்ற தொனியிலும் அவர் பேசினார்.இந்த அறிவிப்பு திமுக தரப்பில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.
கோப்புகள் இருப்பதாக கூறிக்கொண்டே அவற்றை வெளியிடாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற நிலைப்பாட்டை திமுக தலைவர்கள் முன்வைத்தனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், முதலமைச்சர் விஜய் மேஜையில் இருப்பதாக கூறிய மூன்று கோப்புகளையும் ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆதாரங்கள் உள்ளன என்று சட்டப்பேரவையில் பகிரங்கமாக அறிவித்த பிறகு, அவற்றை மறைத்து வைப்பதோ அல்லது தாமதப்படுத்துவதோ சரியல்ல என்பதே அவரது நிலைப்பாடு.
இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்... விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை... மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்...!
கோப்புகளை உடனடியாக வெளியிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இல்லையெனில், சட்டப்பேரவையில் தவறான அல்லது முழுமையற்ற தகவலை அளித்ததாக முதலமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.திமுக தரப்பில் மற்ற தலைவர்களும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். கோப்புகள் உண்மையில் இருந்தால் அவற்றை பொதுவெளியில் அல்லது சட்டப்பேரவையில் வைத்து விவாதிக்க வேண்டும் என்றும், வழக்கு தொடர வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன.
இதையும் படிங்க: சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!