×
 

பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.3.44 கோடி அபராதம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை என்ன காரணம்?

பிபிசி வேர்ல்டு சர்வீஸ் இந்தியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீடு(எப்டிஐ) விதிகளை மீறியதற்காக ரூ.3.44 கோடி அபராதத்தை அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் விதித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் கூபிபிசிஇந்தியா நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு தலா ரூ.1.14 கோடி அபராதமும் விதித்துள்ளது. பிபிசி தளத்தின் செய்தித்தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ பிபிசி வேர்ல்டு சர்வீஸ் இந்தியா அல்லது அதன் இயக்குநர்கள் எந்தவிதமான தீர்ப்பு நகலையோ அமலாக்கப்பிரிவு இயக்குநரகத்திடம் இருந்து பெறவில்லை. இந்திய அரசின் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் உட்பட்டு பிபிசி பணியாற்றுகிறது. எந்த உத்தரவு, தீர்ப்பாக இருந்தாலும், அதை கவனத்துடன் ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம்” எனத் தெரிவித்தார். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, பிபிசி இந்தியா இயக்குநர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அதன்பின் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிபிசி இந்தியா நிறுவனத்தில் 2023  பிப்ரவரி மாதம் வருமானவரித்துறை சோதனை நடத்தியது, அதைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவும் பெமா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடந்த கலவரம் குறித்தும் அதில் 1000க்கும் மேற்பட்டோர் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக கொல்லப்பட்டது குறித்தும் தொடர்புபடுத்தி ஆவணப்படத்தை பிபிசி இந்தியா வெளியிட்டது. இதைத்த தொடர்ந்து பிபிசி இந்தியா அலுவலகத்தில் வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தப்பட்டது. பிபிசி வேர்ல்டு சர்வீஸ் இந்தியா நிறுவனம் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டில் இயங்கி வருகிறது, செய்திகள், கட்டுரைகள், வீடியோக்களை வழங்கி வருகிறது. அந்நிய முதலீட்டை 100 சதவீதம் வைத்திருப்பது சட்டவிரோதம் அதை 26 சதவீதமாகக் குறைக்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மீண்டும் கொரோனாவா? சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! HKU5-CoV-2 என்றால் என்ன?

மத்திய அரசின் அங்கீகாரம் பெற டிஜிட்டல் மீடியாக்கள் விண்ணப்பித்தால் 26 சதவீதம் வரை மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி தரப்படுகிறது என்று கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி  டிபிஐஐடி துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து,பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.3.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டு அதை 2021 அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்த டிபிஐஐடி துறை உத்தரவிடட்டது, இந்தத் தேதிக்குள் செலுத்தத் தவறினால் தினசரி ரூ.5ஆயிரம் செலத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. பிபிசி இயக்குநர்கள் கில்ஸ்ஆண்டனி ஹன்ட், இந்து சேகர் சின்ஹா, பால் மைக்கேல் கிப்சன்ஸ் ஆகியோருக்கு தலா ரூ.1.14 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுவதில் உள்ள சிக்கல்கள்.. விதிகளை மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share