×
 

நிதி கசிவு முதல் 13 லட்சம் காலிப்பணியிடங்கள் வரை..! தவெக அரசை கேள்விகளால் திணறடித்த EPS..!!

சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது தமிழக வெற்றி கழகத்தை போல் ஏற்கனவே அதிமுகவும் திமுகவும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக குறிப்பிட்டார். நீர் மேலாண்மைக்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அரசின் செலவுகளை குறைப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக அரசு கூறியுள்ளது என்றார். 2026- 27 வரி வருவாய் பார்க்கும்போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது என்று கூறினார். ஆறு மாதங்களில் 8000 கோடி கிடைக்க வேண்டும் என்றால் அது ஏன் வரி வருவாய் வரவில்லை எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி என்று பேரவையில் எடப்பாடி பழனி குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி வார்த்தைகளை இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அரசு பொறுப்பேற்றவுடன் 100 நாள் திட்டத்தை வெளியிடுவது வழக்கம் என்று கூறினார். ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சி.வி. சண்முகம் ஏன் தோற்றார்.? இனி எடப்பாடி ஆட்சி தான்..!! அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி.!!

தொடர்ந்து பேசி அவர், வருவாயை பிறக்க நடவடிக்கை இல்லை என்றும் வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவித்தார். அனைத்து குக்கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அரசு துறைகளில் 13 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்த ஈபிஎஸ், அரசு காலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: டெல்டாவிலும் அதிமுக வாஷ் அவுட்..!! EPS செல்லாக்காசா.?! சி.வி. சண்முகம் மீண்டும் தாக்கு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share