அரசியல் களமாக மாறிய பசும்பொன்... ஓபிஎஸ்-செங்கோட்டையன் பயணம்! இபிஎஸ் தடாலடி பதில்...!
ஓ பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் ஒரே காரில் பயணித்தது தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தனது நிலங்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தவர் முத்துராமலிங்க தேவர் என்று புகழாரம் சூட்டினார். தேவருக்கு தங்க கவசம் அணிவித்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். தேவர் குருபூஜையை அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பித்தவர் எம்ஜிஆர் என்றும் கூறினார்.
மேலும், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, முத்துராமலிங்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்... எடப்பாடியை சீண்டும் KAS...!
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியிடம் ஓ பன்னீர் செல்வமும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஒன்றாக பயணித்து வருவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தெரியவில்லை என்றும் வந்தால் தான் தெரியும் எனவும் வந்தவுடன் அதற்கு பதில் கூறுகிறேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுகவை ஒருங்கிணைப்பு எனக் கூறிவரும் செங்கோட்டையன் போக்கு மீது எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இன்னும் 6 மாதத்தில் கூட்டணி சுனாமி சுழன்றடிக்கும்... எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்...!