×
 

அனில் அம்பானியை நெருங்கும் ED! பணமோசடி வழக்கில் இறுகும் பிடி! அரெஸ்ட் ஆரம்பம்!

பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவான அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியுமான அசோக் குமார் பால் (Ashok Kumar Pal) அமலாக்கத் துறை (ED) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது, அனில் அம்பானி மீதான ரூ.17,000 கோடி பணமோசடி வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாகும். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10, 2025) இரவு நடந்த இந்தக் கைது, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மேற்கொள்ளப்பட்டது. அசோக் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு, யஸ் வங்கியால் அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ்' குழுமத்தின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3,000 கோடி கடன் தொடர்பானது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன்கள், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக, ரூ.17,000 கோடி அளவிலான பணமோசடி நடந்ததாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அமலாக்கத் துறையும் PMLA சட்டத்தின் கீழ் வழக்கு தொடங்கியது.

இதையும் படிங்க: Breaking News! சென்னையில் மீண்டும் ED Raid! நகை வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சோதனை!

இதற்கு முன்னதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் அனில் அம்பானியின் வீடு, அலுவலகங்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அவருக்கு சம்மன் அனுப்பி, அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. அனில் அம்பானி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், இந்த வழக்கின் முதல் கைது, 'பிஸ்வால் டிரேட்லிங்க்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வாலாகும். அவர், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு போலி வங்கி உத்தரவாதங்கள் பெற உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அசோக் குமார் பாலின் கைது, ரிலையன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மீதான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போலி வங்கி உத்தரவாதங்கள் மற்றும் கடன் மோசடிகள் தொடர்பாக ரூ.12,524 கோடி கடன்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை கூறுகிறது. இந்த வழக்கில் அனில் அம்பானி உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் குழுமம், "எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறோம். நாங்கள் ஏமாற்றப்பட்டவர்கள்" என்று கூறியுள்ளது.

இந்தச் சம்பவம், நிதி மோசடி வழக்குகளில் தொழிலதிபர்கள் மீதான அரசு நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது. அசோக் குமார், அக்டோபர் 13 வரை அமலாக்கத் துறை காவலில் இருக்கும். வழக்கின் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு 2026 எலெக்‌ஷன்! பீகாருக்கு போட்ட அதே ஸ்கெட்ச்! தேர்தல் ஆணையம் மாஸ்டர் ப்ளான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share