×
 

#BREAKING: போட்றா வெடிய... பீகாரில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாஜக...!

பீகார் சட்டமன்ற தேர்தலில் தனி பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கிறது.

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. 

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட பிறகு இன்று முடிவுகள் வெளியாகும். இதனால் பீகாரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 15 தொகுதிகளில் மட்டுமே பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 85க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவிற்கு அடுத்தபடியாக JDU 76 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. பெரும்பான்மையை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது.

இதையும் படிங்க: 170 தொகுதிகளில் சொல்லி அடிப்போம்... நாங்க தான் கிங்... பாஜக செய்தி தொடர்பாளர் உறுதி...!

பெரும்பான்மையை நிரூபிக்க 122 தொகுதிகள் போதுமானதாக இருக்கும் நிலையில் 191 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் பெரும் ஏமாற்றம் என்னவென்றால் இந்தியா கூட்டணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக கூட்டணியினர் முன்னிலையில் இருந்து வரும் நிலையில் நிதிஷ்குமார் புகைப்படங்களை தாங்கி பாஜக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி முன்னிலையில் உள்ளார். 

இதையும் படிங்க: போட்றா வெடிய...!! பீகார் தேர்தலில் செஞ்சூரி விளாசிய பாஜக... வரலாறு காணாத முன்னிலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share