ஜூன் 19ல் இடைத்தேர்தல்.. தொகுதிகளை பட்டியலிட்டு வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!
கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள காடி மற்றும் விசாவதர், கேரளாவில் உள்ள நிலம்பூர், பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு, மேற்கு வங்கத்தில் உள்ள காளிகஞ்ச் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விசாவதர் மற்றும் கேரள நிலம்பூர் தொகுதிகளில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது. மற்ற 3 தொகுதிகளான காடி, லூதியானா மேற்கு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள காளிகஞ்ச் தொகுதிகளின் பிரதிநிதிகள் இறந்ததால் அந்தத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்.. சிக்கியவர்களின் நிலைமை என்ன..?
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 5 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் வரும் ஜூன் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூன் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் தலைதூக்கும் கொரோனா பரவல்.. சுகாதார அமைச்சர் சொல்வது என்ன..?