தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடக்கும்... தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
இரண்டாம் கட்டமாக தமிழக உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதனை உறுதிப்படுத்தினார். பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
பீகார் வாக்காளர் நீக்கத்திற்கு எதிராக இதுவரை எந்த மேல்முறையீடுகளும் இல்லை என ஞானேஷ்குமார் விளக்கம் அளித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிகாரின் 7.5 கோடி மக்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினர் என்று கூறினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணிகள் முதல் கட்டமாக பீகார் மாநிலத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என்று தெரிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெறுவது, மறைந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாத காரணங்களால் சிறப்பு வாக்காளர் திருத்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் ’SIR'... இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு...!
கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை எட்டு முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் கடைசியாக 2002 முதல் 2004 வரை 21 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் SIR... பாஜக அழுகுணி ஆட்டம் எங்க கிட்ட பலிக்காது... திமுக விளாசல்...!