×
 

பாஜவுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு? 100% ஆதாரம் இருக்கு!! யாரும் தப்ப முடியாது!!

ஆதாரங்கள் வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது. ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திச்ச காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவா வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யுதுன்னு பரபரப்பு குற்றச்சாட்டு வைச்சிருக்காரு. இதுக்கு “அணு குண்டு” மாதிரி ஆதாரங்கள் இருக்குன்னு சொல்லி, “இந்த ஆதாரங்களை வெளியிட்டா தேர்தல் ஆணையம் ஒளிஞ்சுக்க இடமே இருக்காது,”னு எச்சரிக்கையும் விடுத்திருக்காரு. 

இந்த முறைகேடுகள் கடந்த வருஷம் மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல், மக்களவை தேர்தல், இப்போ மகாராஷ்டிராவுலயும் நடந்திருக்குன்னு ராகுல் குற்றம்சாட்டியிருக்காரு. “மகாராஷ்டிராவுல கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்காங்க. இதை நாங்க ஆழமா ஆராய்ந்துட்டு இருக்கோம்,”னு அவரு சொல்லியிருக்காரு.

ராகுலோட இந்த குற்றச்சாட்டுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. “கர்நாடகாவுல ஒரு தொகுதியில 60,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் முறைகேடா மாற்றப்பட்டிருக்கு. இதுக்கு முழு ஆவணங்களும் எங்கள்ட இருக்கு,”னு சிவகுமார் சொல்லியிருக்காரு. 

இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் செத்துருச்சு! அதானிக்கு வேலை பாக்குறாரு மோடி.. ராகுல் விளாசல்..

சித்தராமையா, “பாஜக தேர்தல் ஆணையத்தை தவறா பயன்படுத்தி, உண்மையான வாக்காளர்களோட பெயர்களை நீக்கி, போலி பெயர்களை சேர்த்திருக்கு. இது மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம்,”னு குற்றம்சாட்டியிருக்காரு. “நரேந்திர மோடியோட வெற்றிகள் பிரபல்யமோ, ஆட்சி சாதனைகளோ இல்லை. தேர்தல் ஆணையம் மூலமா நடக்குற வாக்கு திருட்டுதான் காரணம்,”னு அவரு காட்டமா சொல்லியிருக்காரு.

ராகுல் இன்னும் ஒரு படி மேல போய், தேர்தல் ஆணைய அதிகாரிகளை கடுமையா எச்சரிச்சிருக்காரு. “உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை, இந்த முறைகேடுகளில் ஈடுபடுறவங்க நாட்டுக்கு எதிரா செயல்படுறாங்க. இவங்களை ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம். கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்,”னு மிரட்டியிருக்காரு. 

இதுக்கு ஆதரவா, காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, ஆர்ஜேடி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துல போராட்டம் நடத்தியிருக்காங்க. “பீகாரில் நடக்குற வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) ஜனநாயகத்துக்கு எதிரானது,”னு பதாகைகளோடு முழக்கமிட்டிருக்காங்க. இதோட, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உடனே சிறப்பு விவாதம் நடத்தணும்னு கோரியிருக்காங்க.

ஆனா, தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றவை”னு மறுத்திருக்கு. “வாக்காளர் பட்டியல் திருத்தம் வெளிப்படையாக, அரசியல் சாசனப்படி நடக்குது. கர்நாடகாவுல காங்கிரஸ் ஒரு மனுவும் தாக்கல் செய்யலை. பீகாரில் SIR திருத்தத்துக்கு ஒரு மாச கால அவகாசம் இருக்கு. ஆதாரம் இருந்தா சமர்ப்பிக்கலாமே,”னு ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கு. மகாராஷ்டிராவில் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்தது இயல்பான வளர்ச்சிதான்னு, 2009 முதல் 2024 வரையிலான தரவுகளை ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கு.

காங்கிரஸ் இப்போ ஆகஸ்ட் 4-ல் பெங்களூருல போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கு. ராகுல் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்துல நேரடியா எழுப்பப் போறாராம். இந்த “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டு, இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கு. 

இதையும் படிங்க: ட்ரம்ப் பொய் சொல்லுறதா மோடி சொல்லட்டும்!! மொத்த பிரச்னையும் முடிஞ்சிடும்.. செக் வைக்கும் ராகுல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share