×
 

போலி வாக்குகள் புழங்கணுமா? நல்லா சிந்திச்சு பாருங்க.. தேர்தல் ஆணையம் பதிலடி..!

நாட்டில் போலி வாக்குகளை நீக்க வேண்டியது அவசியம் இல்லையா என தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளால், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. அப்போது, பீகார் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தெரிவித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கற்று உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்தும் தேர்தல் ஆணையம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. விமர்சனம் செய்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்றும் தேர்தல் ஆணையம், சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டு, இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இரண்டு இடங்களில் வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் அல்லது வெளிநாட்டு வாக்காளர்கள், அரசியலமைப்பிற்கு எதிராக, வாக்களிப்பவர்களை நீக்க வேண்டியது அவசியம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளது. முதலில் பீகாரில், பின்னர் முழு நாட்டிலும், போலி வாக்குகளைப் பதிவு செய்ய வழி வகுக்க வேண்டுமா என்ற கேள்வியை தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ளது.

இதையும் படிங்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்..! மறுக்கும் அரசு.. மடைமாறாத எதிர்க்கட்சிகள்..!

வெளிப்படையான செயல்முறை மூலம் தேர்தல் ஆணையத்தால் உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறதா, நியாயமான தேர்தல்கள் மற்றும் வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளம் இல்லையா போன்ற கேள்விகள் எழுவதாகவும், இந்திய குடிமக்கள் அனைவரும் அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அத்தியாவசிய சிந்தனைக்கு மிகவும் பொருத்தமான நேரத்திற்கு இந்தியா வந்துவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மோடி அரசு அடாவடி..! பீகாரில் 52 லட்சம் பேரின் வாக்குகள் பறிபோகிறது.. காங். எம்.பி ரன்தீப் சுர்ஜீவாலா குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share