×
 

காலம் மாறும்.. தரமான சம்பவம் இருக்கு! தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை..!

காலம் மாறும்போது தவறு இழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் மர்மமான முறையில் 40 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பரபரப்பு குற்றச்சாட்டு.. கர்நாடக தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம்..!!

மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை விட ஐந்து மாதத்தில் அதிகம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்றவாளிகளே கேட்டுக் கொள்ளுங்கள் காலம் மாறும்போது தண்டனை நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தவறிழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

கர்நாடகாவின் மகாதேவ்புரா தொகுதியில் ஒரு லட்சத்து 250 வாக்குகள் திருட்டு வாக்குகள் என்றும் குறிப்பிட்டார். கடந்த தேர்தல்களில் ஐந்து வழிகளில் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி மற்றும் சாட்டினார்.

குற்கிறாட்சிங் தாங் என்ற நபர் நான்கு பூத்களில் வாக்காளர் தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். கதவு எண் 35 என்ற முகவரியில் மட்டும் 80 வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வாக்குகளை திருடுவது மட்டுமல்ல ஜனநாயகத்தை குழி தூண்டி புதைக்கும் செயல் என்றும் ராகுல் காந்தி என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

இதையும் படிங்க: அமித் ஷா குறித்த அவதூறு பேச்சு!! ஜார்க்கண்ட் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share