×
 

அமெரிக்காவையே தட்டித் தூக்கிய இந்தியா! பொருளாதார பலத்தில் அசூர வேகம்! எலான்மஸ்க் சொன்ன உண்மை!

இவ்வளவு காலமாக உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தி வந்த மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆதிக்கம் குறைந்து,

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இதில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் எவ்வளவு பங்கு வகிக்கும் என்ற பட்டியல் இடம் பெற்றுள்ளது. 

இந்த பட்டியலை உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “அதிகார மையத்தின் சமநிலை மாறிக் கொண்டிருக்கிறது” (The balance of power is changing) என்று ஒற்றை வரியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புள்ளிவிவரங்கள் உலகப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை காட்டுகின்றன. இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தி வந்தன. ஆனால் இப்போது ஆசிய நாடுகள் முன்னிலை பெறுகின்றன. எலான் மஸ்க் இதை சுட்டிக்காட்டியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: வெளியானது Economic Survey!! பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!! GDP-யில் காத்திருக்கும் மேஜிக்!

IMF-இன் படி 2026-ல் உலகின் உண்மையான GDP வளர்ச்சியில் பங்களிப்பு வருமாறு:

  • சீனா – 26.6% (முதலிடம்)
  • இந்தியா – 17.0% (இரண்டாம் இடம்)
  • அமெரிக்கா – 9.9% (மூன்றாம் இடம்)
  • இந்தோனேஷியா – 3.8%
  • துருக்கி – 2.2%
  • நைஜீரியா – 1.5%
  • பிரேசில் – 1.5%
  • வியட்நாம் – 1.6%
  • சவுதி அரேபியா – 1.7%
  • ஜெர்மனி – 0.9%

சீனா மற்றும் இந்தியா இணைந்து உலக வளர்ச்சியில் 43.6% பங்கு வகிக்கின்றன. இது ஆசியா-பசிபிக் பகுதி உலக வளர்ச்சியில் கிட்டத்தட்ட பாதியை ஏற்றுக்கொள்கிறது என்பதை காட்டுகிறது. அமெரிக்கா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர். டிரம்ப் நிர்வாகத்தில் செலவுக் குறைப்பு துறையின் தலைவராக சில மாதங்கள் பணியாற்றினார். பின்னர் அமைச்சர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார். அதன்பின் டிரம்ப் நிர்வாகத்தை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இந்த பதிவில் அமெரிக்காவின் இடம் குறைந்ததை அவர் சுட்டிக்காட்டியது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த IMF தரவு உலகப் பொருளாதாரத்தில் ஆசியாவின் எழுச்சியை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் வளர்ச்சி வேகம் உலக அளவில் பாராட்டப்படுகிறது. எலான் மஸ்க் போன்ற தலைவர்கள் இதை பகிர்வது மேலும் கவனத்தை ஈர்க்கிறது. உலக அதிகார சமநிலை கிழக்கு நோக்கி மாறி வருவதை இது தெளிவாக காட்டுகிறது. 

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு புது சிக்கல்! செல்வப்பெருந்தை பேச்சை டேப் செய்யும் மர்மநபர்கள்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share