EPFO-வில் அதிரடி மாற்றம்..! இனி எல்லாமே WHATSAPP-ல்..! மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வசதி..!!
PF தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப்பில் அறியும் சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான ஈபிஎஃப்ஓ-வின் 74-வது ஆண்டு நிறைவு விழாவில் ஒரு முக்கியமான புதிய வசதியைத் தொடங்கி வைத்தார். இப்போது வாட்ஸ்அப் செயலியின் மூலம் எளிதாக பிஎஃப் கணக்கு விவரங்களைப் பார்க்கலாம். அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 8796441800-க்கு செய்தி அனுப்பினால் போதும்.
பிஎஃப் இருப்புத் தொகை, சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்புக் விவரங்களை உடனடியாகப் பெற முடியும்.இந்த வசதி ஈபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. முன்பு பிஎஃப் இருப்பை அறிய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து சரிபார்க்க வேண்டியிருந்தது. இப்போது பெரும்பாலான மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலம் இவை அனைத்தும் கிடைக்கின்றன.
அலுவலக வருகை தேவையில்லை. எளிய செய்தி அனுப்பினால் போதும்.இந்த சேவையைப் பயன்படுத்த முதலில் 8796441800 என்ற எண்ணைத் தொடர்புகளில் சேமித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாட்ஸ்அப்பைத் திறந்து அந்த எண்ணுக்கு “Hi” அல்லது “Hello” என்று செய்தி அனுப்ப வேண்டும். உடனே மொழித் தேர்வு வரும். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
இதையும் படிங்க: ALERT..!! வங்கக்கடலில் விஸ்வரூபம் எடுக்கும் முரசு..! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள்..!
அதன் பிறகு பிஎஃப் இருப்பு பார்க்க, கடைசி ஐந்து பரிவர்த்தனைகளைக் காண, பாஸ்புக் பதிவிறக்கம் செய்ய அல்லது பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா தொடர்பான உதவி பெற விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.பாதுகாப்புக்காக OTP சரிபார்ப்பு நடைபெறும். யுஏஎன்-உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட்டு சரிபார்த்த பிறகு கணக்கு விவரங்கள் காட்டப்படும். பாஸ்புக்கை நேரடியாகப் பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும் முடியும். இதனால் கணக்கில் உள்ள மொத்தத் தொகை, பங்களிப்பு விவரங்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் எளிதில் கிடைக்கின்றன.
இதையும் படிங்க: பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?