×
 

பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

இப்போது 5 லட்சம் ரூபாய் வரை பாதி அளவு பணத்தை 72 மணி நேரத்திற்குள் ஆட்டோமேட்டிக்கலி அப்ரூவ் எனப்படும் தானாக அங்கீகரிக்கும் முறையில் பெறலாம்.

இன்றைய காலத்தில் வேலை செய்து வரும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பிஎஃப் கணக்கு ஒன்று இருக்கிறது. இது பணி ஓய்வு, மருத்துவ செலவுகள் அல்லது வீடு வாங்கும் நேரம் போன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பட்ட சேமிப்பு போல் செயல்படுகிறது. ஆனால் இதுவரை அந்த பணத்தை திரும்ப பெறுவது ஒரு பெரிய அதிகாரப்பூர்வ சிக்கலாகவே இருந்தது. இந்நிலையை மாற்ற பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது 2025ஆம் ஆண்டு சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 2025ல் இருந்தே செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. 

இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை யூபிஐ மூலமாக நேரடியாக பணம் திரும்ப பெற முடியும். முந்தைய முறையில் ஒவ்வொரு அனுமதிக்கும் நாட்கள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது 5 லட்சம் ரூபாய் வரை பாதி அளவு பணத்தை 72 மணி நேரத்திற்குள் ஆட்டோமேட்டிக்கலி அப்ரூவ் எனப்படும் தானாக அங்கீகரிக்கும் முறையில் பெறலாம். இதற்காக இனி வேலை செய்யும் நிறுவனத்தின் கையெழுத்தோ பிஎஃப்ஓ அலுவலகம் செல்ல வேண்டிய தேவையோ கிடையாது. ஆனால் இவை நடைபெற முக்கியமாக உங்கள் கேஓய்சி விவரங்கள் முறையாக புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 

அதாவது ஆதார் எண், பேன் என்னும் வங்கி கணக்கும் உங்கள் யுஏ எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். முழு தொகையை பெறுவதற்கு நீங்கள் 58 வயதை கடந்திருக்க வேண்டும் அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வேலை இழந்திருக்க வேண்டும். இந்த இரண்டு மாத வேலைய் இழப்பு நிலைக்கேற்ப 75% வரை பணத்தை பெற அனுமதிக்கப்படுகிறது. மேலும் நிரந்தரமாக வெளிநாடு செல்லும் ஊழியர்கள் மட்டும் முழு தொகையையும் பெற முடியும். பாதி தொகையை எப்போது பெறலாம் என்றால் மருத்துவ சிகிச்சை, திருமணம், கல்வி,வீடு கட்டுதல் அல்லது வீடு கடனை திருப்பி செலுத்துவது போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பிஎஃப்-யில் வந்தது அதிரடி மாற்றங்கள்... இதை உடனே நோட் பண்ணிக்கோங்க...!

எடுத்துக்காட்டாக ஏழு வருட சேவை கொண்ட நபர் திருமணத்திற்கோ அல்லது கல்விக்கோ காரணமாக தனது பங்களிப்பிலிருந்து 50% வரை பணத்தை பெறலாம். மருத்துவ செலவிற்காக ஆறு மாத அடிப்படை ஊதியம் அல்லது பங்களிப்பு மற்றும் வட்டியை சேர்த்து திரும்ப பெறலாம். இந்த பணம் திரும்ப பெறும் செயல் முறையை பிஎஃபோ இணையதளம் அல்லது உமாங் செயலின் மூலம் செய்து முடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் புதியதாக அறிமுகமான திடீர் இன்ஸ்டன்ட் உத்ரா முறையில் யபிஐ ஐடியை வங்கி கணக்குடன் இணைத்து நேரடியாக பணத்தைபெறலாம்.

 மேலும் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் பெறும்போது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சேவை செய்திருந்தால் எந்த வரியும் கிடையாது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பணத்தை பெறுகிறீர்கள் என்றால் பேன் கார்டு இருந்தால் 10% டிடிஎஸ் மற்றும் பேன் சமர்ப்பிக்காமல் இருந்தால் 30% டிடிஎஸ் பிடிக்கப்படும். எனினும் 50,000க்கும் குறைவாக திரும்ப பெறப்படும் பணத்திற்கு டிடிஎஸ் பிடிக்கப்படாது. 

இதையும் படிங்க: தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share