எங்கும் கொலை... எப்போதும் கொலை.. ஒரு நாளாச்சு வாய தொறந்தாரா ஸ்டாலின்? இபிஎஸ் கண்டனம்..!!
எங்கும் கொலை, எப்போதும் கொலை என்ற சூழ்நிலை இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இன்றைய நிலவரத்தை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ளார். இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது என்றார். முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை என்றும் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நிதிஷுக்கே இந்த நிலைமை... EPS பத்தி சொல்லணுமா? K.C. பழனிசாமி எச்சரிக்கை..!!
தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார் என்றும் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி நியாயப்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் ஆட்சியில் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" கொலைகள் நடக்கவில்லை. "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும்.,மக்கள் மாண்டது போதும் என்றார். தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு... EPS எடுத்த அதிரடி முடிவு..!!