×
 

ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிமிதான் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார் என்றும் யாரும் வழிமொழிவது பேரவை மரபு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். நம்பிக்கை கூறும் தீர்மானத்தை யாரும் வழிமொழிய தேவையில்லை என்ற சபாநாயகர் விளக்கம் கொடுத்தார். 2011 முதல் 2021 வரை பொற்கால ஆட்சி அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ் போட்ட பிச்சையில் வெற்றி..! ஈனத்தனம் இல்லையா..? அதிமுக கண்டனம்..!

அதிமுக ஆட்சி அமையும் என்று நம்பி தான் மக்கள் வாக்களித்திருப்பதாகவும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற இருப்பதாகவும் கூறினார். அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி என்றும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் திகழ்ந்தது எனவும் தெரிவித்துள்ளார். 66% பேர் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்தபோது விஜயபாஸ்கர், C.V. சண்முகத்திடம் பேசினார். இப்போது வேண்டாம் என்று C.V. சண்முகம் தெரிவித்தார். இவரை எடுத்து எஸ்.பி. வேலுமணி பேசினார். 

இதையும் படிங்க: திக்.. திக்.. அரசியல் களம்..! மூத்த நிர்வாகிகளுடன் EPS தீவிர ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share