விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!
விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் தற்போது முழு வீச்சில் உள்ளது. தேர்தல் தேதி ஏப்ரல் 23 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் திமுகவும் அதிமுகவும் மிக முக்கிய எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றன.திமுக தரப்பில் தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து, பல முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.
உதாரணமாக, காங்கிரஸுடன் 28 தொகுதிகள் ஒதுக்கீடு உள்ளிட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றமடைந்து வருகின்றன. சில கட்சிகள் அதிக தொகுதிகள் கோரி நெருக்கடி கொடுத்தாலும், திமுக தரப்பு தனது முடிவுகளை உறுதியாக எடுத்து வருகிறது. இதனால் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்து, தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது.அதேநேரம், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் அறிக்கை குழு பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்று, அவற்றை இறுதி வடிவம் கொடுத்து வருகிறது. கனிமொழி தலைமையிலான குழு ஆனால் அதிமுக தரப்பில் நிலைமை சற்று வேறுபட்டுள்ளது. தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக 4 உறுப்பினர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அமைத்துள்ளது. கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பா. வளர்மதி ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு மூலம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிக தொகுதிகள் கோருவதால் இழுபறி நீடிக்கிறது.
இதையும் படிங்க: அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!
இந்த நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் திமுக அரசை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தொகுதி பங்கீட்டை இறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலகத்துலயே நன்றிகெட்ட அரசியல்வாதி EPS தான்.. மீண்டும் சீண்டிய OPS ..!