FOOTAGE-ல் அப்படி தெரிஞ்சுருக்கு... இபிஎஸ்-ஐ விட்டுக் கொடுக்காத அண்ணாமலை..!
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திப்பதே எல்லோருக்கும் தெரியும் என்ற சூழலில் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றார். சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து, இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இபிஎஸ் கலந்துரையாடினார். பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த கலந்துரையாடல் தொடர்பாக கேட்டபோது, அவர் முகத்தை மூடிக்கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக விளக்கமளித்தார். பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதாகவும், நேரம் அதிகமானதால் தன்னுடன் இருந்தவர்களை அனுப்பியதாகவும் கூறினார்.
தான் மட்டும் அமித்ஷாவிடம் 10 நிமிடம் தனியாக பேசியதாக தெரிவித்தார். அரசாங்க காரில் தான் அமித்ஷாவை சந்திக்க சென்றதாகவும், முகத்தை தான் துடைத்தேன் என்றும் கூறினார். முகத்தை மூடிக்கொண்டு செல்ல அவசியம் இல்லை எனவும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் திட்டமிட்டு அவதூறாக பேசுவது சரி அல்ல என்றும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: எங்கள பத்தி பேச திமுகவுக்கு அருகதை இல்ல... லிஸ்ட் போட்டு சாட்டையை சுழற்றிய இபிஎஸ்
இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது எல்லோருக்குமே தெரியும் என்று கூறினார். அப்படி இருக்க இபிஎஸ் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் முகத்தை மறைத்ததாக நான் பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார். Footageல் அப்படி தெரிந்திருக்கிறது எனவும் விளக்கினார்.
இதையும் படிங்க: இதுக்குதான் அமித்ஷாவை சந்தித்தேன்! ஹப்பாடா... ஒரு வழியா சொல்லிட்டாரு பா... மௌனம் கலைத்த EPS