×
 

அமித் ஷா அப்படி என்ன சொல்லிட்டாரு... காஸ்ட்லி காரில் முகத்தை மூடியபடி எஸ்கேப் ஆன எடப்பாடி ...!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி வெளியேறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நான் அந்த பணிகளை மேற்கொள்வேன் என்று அறிவித்து 10 நாள் கெடு விதித்தார். மேலும் கட்சியில் இணைக்கப்படும் தலைவர்கள் தொடர்பாக பொதுச்செயலாளரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

இந்த அறிவிப்பை வெளியிட்ட மறுநாளே செங்கோட்டையனை அனைத்து கட்சி பதவியில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளமாட்டேன் எனக்கூறி டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதும் பரபரப்பைக் கிளப்பியது. 

இந்நிலையில் குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்போவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

இதையும் படிங்க: #BREAKING பரபரக்கும் அரசியல் களம்... டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!

அதனையடுத்து நேற்றிரவு டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்குள் நிலவும் பிரச்சனைகள், செங்கோட்டையன் விவகாரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை கட்சிக்குள் இணைப்பது, முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிமுகவுக்குள் உட்கட்சி பிரச்சனையானது மிகப்பெரிய அளவில் வெடிக்க தொடங்கி இருக்கின்றது.  அதன் காரணமாகத்தான் தற்பொழுது தொடர்ந்து பல சந்திப்புகளானது நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் காண முடிகின்றது. கூட்டணி பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு நோக்கத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆதிமுகாவினுடைய பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவது தொடர்பாகவும் தான் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 

சுமார் 20 நிமிட சந்திப்பிற்கு பிறகு அமித் ஷாவின் இல்லத்தில் இருந்து காஸ்ட்லியான சொகுசு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, காருக்குள் தனது முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: செங்கோட்டையன் ஆட்டம் குளோஸ்... அமித் ஷாவிடம் அந்த விஷயத்தை ஓபன் செய்யப் போகும் இபிஎஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share