×
 

எங்கள் தங்கம் MGR... சதி திட்டங்களை தவிடு பொடியாக்குவோம்..! EPS சூளுரை..!

எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சியை நிலை நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று எம்ஜிஆர் பிறந்த நாள் அதிமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்து உள்ளார். 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள் என்று தெரிவித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள் என்று கூறினார்.

தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவராம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குவதாக கூறினார்.

தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: கழிவறை முதல் காவாங்கரை வரை கலைஞர் பெயர்... MGRஐ மறைக்க முயற்சிக்கும் திமுக... அதிமுக கண்டனம்...!

அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன் என்றும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் எனவும் வெற்றிவாகை சூடுவோம் என்றும் சூளுரைத்து உள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி அமைப்போம்... எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய EPS உறுதிமொழி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share