×
 

எங்க வாத்தியாரு..! எம்ஜிஆர் பிறந்த நாள்... மரியாதை செலுத்திய இபிஎஸ்..!

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

இன்று எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள். தமிழ்நாடு முழுவதும் இந்த நாள் எப்போதும்போலவே மிகுந்த உற்சாகத்துடனும், பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறார் என்பதற்கு இந்த கொண்டாட்டங்களே சாட்சி. காலையில் இருந்தே சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன.

இலங்கையின் நாவலப்பிட்டியில் 1917-ஆம் ஆண்டு இன்றைய தினம்தான் பிறந்தார் எம்.ஜி.ஆர். என்றாலும், தமிழக மண்ணில்தான் அவர் மக்களின் மனதில் அழியாத இடம் பிடித்தார். நடிகராகத் தொடங்கி, அரசியல்வாதியாக மாறி, முதலமைச்சராக ஆட்சி செய்து, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்தவர். அவரது பிறந்த நாள் இன்று வெறும் தேதி அல்ல. அது ஒரு கொள்கையின் நினைவு நாள், மனிதநேயத்தின் கொண்டாட்ட நாள்.

இன்று தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் திலகம் வாழ்க என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: திமுகவின் வாய்ச் சவடாலுக்கு தான் பேரறிஞர் அண்ணா தேவை... பூங்கா பெயர் மாற்றத்திற்கு இபிஎஸ் கண்டனம்...!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏராளமான அதிமுகவினர் குவிந்த நிலையில் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தினர். எம்ஜிஆரின் பிறந்த நாளை அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆங்காங்கே எம்ஜிஆர் உருவப்படங்கள் அமைத்து மரியாதை செலுத்தி வருவதுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்... யார் வேட்பாளர்? 3வது நாளாக இபிஎஸ் நேர்காணல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share