பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!
போடி தொகுதியில் திமுக சார்பாக களமிறங்குற ஓபிஎஸை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் முக்கியமான முகமாக இருந்த ஓ. பன்னீர்செல்வம் , மூன்று முறை முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா விசுவாசி என இருந்தவரின் மதிப்பு தர்மயுத்தம் 2.O-விற்கு பிறகு சரிந்தது. எடப்பாடி பழனிசாமியால் அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் விலக்கி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் கட்சியில் இணைவதற்கு பல வழிகளில் முயற்சி செய்தார். பாஜக தலைமையாவது தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துவிடும் என அமித் ஷாவை வைத்து காய் நகர்த்திப்பார். ஆனால் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் இருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அதிரடி முடிவு எடுத்து திமுகவில் இணைந்தார். அவருடைய இந்த முடிவு அரசியல் களத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தினாலும், திமுகவிற்கு பலமாகவே பார்க்கப்பட்டது. இதன் மூலமாக தேர்தலில் தேர்தல் ரேஸில் திமுக முன்னிலை வகிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் திமுகவிற்கு ஆதரவாக முதன் முதலில் ஓபிஎஸ் தனது பிரசார பயணத்தை தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி வர உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. இந்த தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனை தீவிர பிரசாரத்தில் ஈடுபட திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாம். நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை எடப்பாடி பழனிசாமி இப்படி வஞ்சித்துவிட்டாரே என்ற கோபத்தில் உள்ள தேவர் சமுதாயத்தின் அனுதாப அலையை வாக்குகளாக ஓபிஎஸ் மாற்றித் தருவார் என்ற நம்பிக்கையும் திமுகவிடம் உள்ளது.
இதையும் படிங்க: பதவி சுகம்… இந்த வயசுல இது தேவையா? ஓபிஎஸ்ஐ ரவுண்டு கட்டிய TTV தினகரன்..!!
இதனால் போடி தொகுதியில் திமுக சார்பாக களமிறங்குற ஓபிஎஸை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம் ஓ.பன்னீர்செல்வத்தை எந்த தொகுதியில் களமிறக்கினாலும், காலி செய்ய அதிமுக தலைமை புது பிளான் ஒன்றை போட்டு வைத்திருக்கிறார்களாம். அதாவது ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதியில் பண பலமும், செல்வாக்கும் மிக்க நபரை அதிமுக சார்பில் களமிறக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம். ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் போடியில் களமிறங்கினால், அவரை எதிர்த்து போட்டியிட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நடத்தும் ஜெகநாத் மிஸ்ரா என்ற தங்க நகைக்கடன் தொழில் செய்பவரை அதிமுக சார்பில் இறக்க திட்டமிட்டுள்ளாராம்.
முதலில் ஜெகநாத் மிஸ்ராவை திமுகவில் சேர்க்க தங்க தமிழ்ச் செல்வன் காய் நகர்த்தி வந்த நிலையில், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால், ஜெகநாத் மிஸ்ரா உடைய இணைப்பு தள்ளி போயுள்ளது. தற்போது அதே ஜெகநாத் மிஸ்ராவிடம் அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் சேர்க்க உள்ளார்களாம். அந்த பேச்சுவார்த்தையின் போது போடி தொகுதியில் வாய்ப்பு கொடுத்தால் ஜெயிச்சு காட்டுறேன் என எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு கொடுத்துள்ளாராம். அதிமுகவின் நெருக்கடிகளைக் கடந்து போடியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறுவாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்...
இதையும் படிங்க: “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!