×
 

பொங்கல் பரிசு காத்திருக்கு… ஆனா SUSPENS… இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்…!

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நீண்டகால வழக்கமாகும். இத்திட்டம் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டுகளில் இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற அடிப்படைப் பொருட்கள் இடம்பெற்றன. சில ஆண்டுகளில் ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணங்களால் சில சமயங்களில் ரொக்க உதவி நீக்கப்பட்டது. இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

தற்போது, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார். ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது இதையேதான் வலியுறுத்தியதாகவும் தற்போது நானும் அவை வலியுறுத்துகிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மிரட்டும் மா.சு… பரிதவிக்கும் செவிலியர்கள்… பெயருக்கு தான் மகளிர் ஆட்சி… விளாசிய அதிமுக…!

பொங்கல் பரிசு தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்த நிலையில் பொங்கல் பரிசு என்ன என்பது குறித்து அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, பொங்கல் பரிசை பொருத்தவரை இப்போது நாங்கள் எதுவும் சொல்ல மாட்டும் என தெரிவித்தார். என்ன பரிசு கொடுக்கப் போகிறோம் என்பது கடைசி நேர ரகசியம் என்றும் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி இப்போது வைக்கும் கோரிக்கையை அவரது ஆட்சி காலத்தில் கொடுத்தாரா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்... தவெக தூய சக்தியா? சேலத்தில் EPS பிரஸ் மீட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share