×
 

தொங்கியது இபிஎஸ் தலை தான்... திமுக ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கு... சேகர்பாபு பதிலடி..!

எடப்பாடி பழனிச்சாமியின் தலை தான் தொங்கிவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். பின்னர் திமுகவின் தமிழகம் தலைகுனியாது என்ற பிரச்சார பயணம் தொடர்பாக விமர்சித்து பேசி இருந்தார். தமிழகம் தலை தொங்கிவிட்டது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் எடுத்துரைத்து பேசினார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொங்கியது எடப்பாடி பழனிச்சாமியின் தலை தான் என்றும் எங்கள் தலை நிமிர்ந்து தான் இருக்கிறது என்றும் கூறினார்.

எதிர்கொண்ட தேர்தல்களில் தோல்வியை கண்டவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை எனவும் கூறினார். அதிமுகவில் இருப்பவர்கள் கரைந்து கொண்டே இருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய குறிப்பு பேசும்போது கூட வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

திமுக ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கி வருகிறது என்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கூறப்படும் பட்டேலுக்கு இணையாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். எல்லாவற்றையும் எதிர்கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தும் எங்கள் தலை நிமிர்ந்து உள்ளதா அல்லது தங்கள் தலைவர்களை கொச்சைப்படுத்தும் போது மௌனியாக இருப்பவர்களின் தலை நிமிர்ந்து இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: “NO COMMENTS” … எடப்பாடிக்கு தோல்வி பயம்..! செங்கோட்டையன் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share