துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!
திமுக அரசை துர்பாக்கிய அரசியலை எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை எம்ஜிஆர் நகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம், ஜெயபிரகாஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,
திமுக ஆட்சியை துர்பாக்கிய ஆட்சி என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, குற்றவாளிகளுக்கு துணையாக திமுக அரசின் நிற்கிறது என்று விமர்சித்தார். அதிமுக ஆட்சி அமைந்த உடன் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தூசு தட்டப்படும் என்று உறுதிப்படுத்த தெரிவித்தார். அதிகாரிகளின் உடந்தையுடன் மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார். நாமக்கல்லில் ஏழைகளை குறிவைத்து உடல் உறுப்புகள் திருடப்படுவதாகவும், உடல் உறுப்புகளை திமுக திருடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நகர்புற வளர்ச்சி குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியதாகவும் மூன்று முறை கடிதம் அனுப்பிய போதிலும் தற்போது வரை எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்து நாளொன்றுக்கு 15 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!
வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் அரசு ஊழியர்கள் வீதிக்கு வந்து போராடியதாகவும் திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் மீது வரி சுமையை சுமத்தும் அரசாக திமுக இருக்கிறது என்றும் பத்து ரூபாய் கூடுதலாக டாஸ்மாக்கில் வசூலிப்பதன் மூலம் 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். திமுகவின் 525 வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் திமுக அரசு தான் என்றும் வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: உலகத்துலயே நன்றிகெட்ட அரசியல்வாதி EPS தான்.. மீண்டும் சீண்டிய OPS ..!