பயிரை பார்க்காமல் ரயில் ஏறி போனவர் உதயநிதி… திமுக அரசால் வாடிய விவசாயிகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…!
விவசாயிகளின் பயிரை பார்க்காமல் ரயில் நிலையத்திற்கு சென்றவர் உதயநிதி ஸ்டாலின் என இபிஎஸ் விமர்சித்தார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், டெல்டா மாவட்டங்களில் 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
15 நாட்களாக நெல் மூட்டைகளை காவல் காத்து வைத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். டெல்டாவில் பயிர் பாதிப்புகளை பார்க்காமல் ரயில் நிலையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
விவசாயிகளை பார்ப்பதற்கு அஞ்சி தான் பார்க்காமல் சென்றுவிட்டார் துணை முதலமைச்சர் என்றும் பொருட்களை வாங்கும் சக்தியை ஏழை எளிய மக்கள் இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மின் கட்டணம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது என்று கூறியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டு பேசினார். ஆனால் திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குல என்ன பயம்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறீங்க? இபிஎஸ் சரமாரி கேள்வி…!
வரி மேல் வரி போட்டு மக்களை உறிஞ்சி கொண்டிருக்கிறது திமுக அரசு என்றும் உடல் உறுப்பை விற்று வாழ்க்கையை நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் உடல் உறுப்பை கூட விட்டு வைக்கவில்லை என்றும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சொந்த பலத்தை கொண்ட கட்சி அதிமுக எனவும் மக்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்விக் கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம்... வாக்குறுதி எல்லாம் என்னப்பா ஆச்சு? திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்...!