×
 

வர்த்தகப்போர் எதிரொலி! மோடியுடன் பின்லாந்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை!

பிரதமர் மோடியை இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்காவோட வர்த்தகப் போர் அழுத்தம் உச்சத்துல இருக்கற இந்த நேரத்துல, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வழியா நீண்ட உரையாடல் நடத்தினாங்க. இந்த பேச்சுவார்த்தையில இந்தியா-பின்லாந்து உறவுகள், வர்த்தகம், குவாண்டம் தொழில்நுட்பம், 6ஜி, செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் பாதுகாப்பு மாதிரியான முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. 

அதோட, உக்ரைன் போர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்போட சமீபத்திய சந்திப்புகள், ஈரானின் அணுசக்தி ஒப்பந்த பதற்றம் பற்றியும் விவாதிச்சாங்க. மோடி, இந்தியாவோட நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார் – உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணணும், விரைவில அமைதி மீட்கப்படணும்னு வலியுறுத்துனாரு.

ஸ்டப், வாஷிங்டன்ல ஐரோப்பா, அமெரிக்கா, உக்ரைன் தலைவர்களோட நடந்த சந்திப்புகளைப் பற்றி மோடியிடம் விளக்கினார். இந்த சந்திப்புகள், உக்ரைன்-ரஷ்யா மோதலுக்கு தீர்வு காண்பது பற்றியது. மோடி, இந்தியாவோட அமைதி நிலைப்பாட்டை வலியுறுத்தி, “பேச்சுவார்த்தையே ஒரே வழி”ன்னு சொன்னார். ஸ்டப், இந்தியாவோட பங்களிப்பை பாராட்டி, “இந்தியாவோட குரல் உலக அரங்கில மதிக்கப்படுது”ன்னு கூறினார். இருவரும், போர் முடிவுக்கு வரணும்னு ஒருமித்த கருத்து சொன்னாங்க. 

இதையும் படிங்க: வர்த்தகம் ஆயுதமாகிருச்சு! இந்தியாவுக்கு வார்னிங் கால்!! முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை!

இந்தியா-பின்லாந்து உறவை வலுப்படுத்த, வர்த்தகம், தொழில்நுட்பம், நிலைத்தன்மை துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த முடிவு செஞ்சாங்க. ஸ்டப், இந்தியா-ஐரோப்பிய யூனியன் இலவச வர்த்தக ஒப்பந்தத்துக்கு (FTA) ஆதரவு தெரிவிச்சார், இது அமெரிக்காவோட 50% வரி அழுத்தத்துக்கு மத்தியில இந்தியாவுக்கு புது சந்தை திறக்கும். 

2026-ல இந்தியாவுல நடக்கவிருக்கும் AI இம்பாக்ட் சம்மிட்டுக்கு ஆதரவு கொடுத்து, ஸ்டப் மோடியை பின்லாந்துக்கு வரச் சொன்னார். மோடி X-ல பதிவு செய்தார்: “ஸ்டப்புடன் அருமையான பேச்சு. பின்லாந்து EU-இன் முக்கிய துணை. வர்த்தகம், தொழில்நுட்பம், அமைதிக்கான முயற்சிகள் பற்றி விவாதம்.”

அதே நேரத்துல, ஈரான் அணுசக்தி ஒப்பந்த (JCPOA) விவகாரம் உலக அரங்கை பதற்றப்படுத்துது. 2015-ல உருவான இந்த ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுத தயாரிப்பிலிருந்து தடுத்து, யூஎன் தடைகளை நீக்கியது. ஆனா, 2018-ல டிரம்ப் வெளியேறி, தடைகளை திரும்ப கொண்டுவந்தார். ஈரான், 60% யூரேனியம் செறிவூட்டலை ஆரம்பிச்சு, 400 கிலோ ஸ்டாக் வச்சிருக்கு. 

ஜூன் 2025-ல இஸ்ரேல்-அமெரிக்கா, ஈரானின் அணு வளாகங்களை (ஃபோர்டோ, நடான்ஸ்) தாக்கியதால, ஈரான் IAEA ஆய்வுகளை நிறுத்தியது. ஆகஸ்ட் 27-ல ஜெனீவாவில் E3 (பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி) நாடுகள், ஈரானோட பேச்சுவார்த்தை நடத்தினாங்க, ஆனா ஈரான் நிபந்தனைகளை (ஆய்வு அனுமதி, யூரேனியம் மாற்றம்) மறுத்துடுச்சு. E3, ‘ஸ்னாப்பேக்’ மூலம் யூஎன் தடைகளை அக்டோபர் 18-க்கு முன்னாடி கொண்டுவர மிரட்டுது. ஈரான், “இது சட்டவிரோதம்”னு எச்சரிக்குது, ரஷ்யா-சீனா ஆதரவு தருது. இது, உலக அமைதிக்கு பெரிய சவால். இந்தியா, அமைதி தீர்வுக்கு ஆதரவு தருது, EU உறவை வலுப்படுத்துது. 

இதையும் படிங்க: இது மோடியின் போர்! இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்.. ரஷ்யா போர் குறித்து ட்ரம்ப் ஆலோசர் சர்ச்சை பேச்சு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share